உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

பிடி

நல்ல வேளை! சைவ—வைணவ மாச்சாரியத்தைக் கொண்ட அந்தப் பிரதானியர்கள் கிடைத்தனர். அவர்கள் சொன்ன யோசனையும், தக்கதோர் உதவியாக அமைந்தது.

காரணமின்றி அவரை நீக்கியிருக்க முடியாது—கலகமே பிறந்துமிருக்கும். சைவர் என்ற துவேஷத்தால் வைணவ மன்னர், பரஞ்ஜோதியை விலக்கிவிட்டார் என்று வதந்தி பரவினால், வீண்வம்பாகும். அவரை சிவத்தொண்டு புரியச் செய்துவிட்டேன்! அதுவே சரியான முறை! பரஞ்ஜோதியாரை, படைத்தலைவர் பதவியிலிருந்து விலக்கிவிட்டு மட்டும் இருந்தால், ஆபத்து வேறு உருவில் வரக்கூடும்! ஆமாம்! எந்த மண்டலமும் அவர் வரவை ஆவலோடு எதிர் பார்க்கும். சென்றால் பல்லவ சாம்ராஜ்யம் சிதையும்.

இப்போது நிர்ப்பயம்! பரஞ்ஜோதியார், வாளெடுத்துத் தன் வல்லமையை நிலைநாட்டி, வளரும் புகழ் மேலும் ஓங்கச் செய்து, என் புகழையும் மங்கச் செய்ய முடியாது; வேற்றூர் சென்று என் மனதை மருட்டவும் முடியாது! அவர் இனிச் சிவத்தொண்டு புரிந்து வருவார்! இங்கே என் விருப்பத்தின்படி, பல்லவனின் படை இருக்கும். போரில் வெற்றியும் கிடைக்கும்! தளபதி யார்? பரஞ்ஜோதியல்ல. மன்னனை மிஞ்சும் ஜோதியல்ல, நானாகப் பார்த்து உண்டாக்கும் ‘ஜோதி’ இருக்கும்.

ஆம்! நரசிம்மனின் வீரத்தையும், புகழையும் இழக்காமலிருக்க வேண்டுமானால், நரசிம்மனின் படை, தலைவர் பரஞ்ஜோதியாரை இழக்கத்தான் வேண்டும். மணி முடிதரித்த எனக்கு மன்னனுக்குரிய வீரம், கீர்த்தி கிடைக்க வேண்டுமானால், பரஞ்ஜோதியார் மடம் புகுந்தாக வேண்டும். ஆகவேதான் அவரை மடத்தில் சென்று மகேஸ்வரனைத் தொழுமாறு கட்டளையிடவில்லை—வேண்டிக் கேட்டுக்கொண்டேன்—வென்றேன்; மன நிம்மதியும் பெற்றேன்—வாழ்ந்தேன்.

விளக்கொளி மங்கலாயிற்று. உலவிக் கொண்டே நரசிம்மப் பல்லவன், நிழலுருவத்தைக் கண்டான்—சிரித்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/42&oldid=1766535" இலிருந்து மீள்விக்கப்பட்டது