34
பிடி
“வீண் வேதனை அடைகிறீர் வேந்தரே! நாட்டுக்குப் பணியாற்றுவது நல்லோர் கடமை. நான் அஃதன்றி வேறென்ன செய்தேன். என்றும் அப்பணி புரிவதே என் விருப்பம்; முறையுங்கூட.”
“முறையன்று, அறமுமன்று. சைவ மெய்யன்பராம் உம்மை, அறியாது போனேன். பெரும்பழி தேடிக் கொண்டேன். இப்போதுதான் உணர்ந்தேன் உமது பெருமையினை அமைச்சரே! சீலராம் பரஞ்ஜோதியாருக்கு மானியமாக்கிய ஊர்ப் பெயர் குறிக்கப்பட்ட செப்புப் பட்டயம் எங்கே? பெற்றுக் கொள்க, பெருநெறி கண்டவரே, பிழை பொறுத்தருள்க!”
“மன்னரே! தாங்கள் மனமுவத்து அளிக்கும் இந்த மானியம்...”
“பேழையில் பொற்கட்டிகள் உள்ளன. பெருந்தகையீர்! ஏற்றுக் கொள்க!”
“என்னே மன்னரின் கொடைத்திறன்! ஏனோ எனக்கு இத்துணை செல்வம்?”
“சைவச் செல்வரே! பெருநிதியன்று யான் அளித்தது”
“பெருநிதியன்றோ! மன்னரே! தங்கள் ஆதரவு பெற்று அவையில் அமர்ந்த அன்றே யான் பெருநிதி பெற்றவனானேன். என் அரசர்க்குப் பணிபுரியும் பேறு கிடைத்ததே பெருநிதியன்றோ! ஏதோ, தங்களின் வலிமைமிகுந்த படை பலத்தைக் கொண்டு, புலிகேசியைத் தோற்கடித்தேன். இச்சிறு செயலுக்கு எவ்வளவு பரிசு! என்னென்ன வகையான உபசாரம்!"
“உபசாரமென்று உரைத்திட வேண்டாம் உத்தமரே! என் காணிக்கை இவை.”
“மன்னா! யான் உமது படைத்தலைவன்-பரிசு இவை-என் பணிக்கு மெச்சி.”