உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

லில்பர்ன்‌ என்றோர்‌ எழுத்தாளன்‌ ராஜத்துரோகமாக எழுதினான்‌ என்று வழக்குத்‌ தொடுக்கப்பட்டது, முச்சந்தியில்‌ நிறுத்தப்பட்டு, அவன்‌ கழுத்தை ஒரு பலகைக்குள்ளே புகுத்தித்‌ தண்டித்தனர்‌! இது கேவலப்படுத்துவதற்காக இருந்துவந்த தண்டனை முறை. சிறு கூட்டம்‌ அவன்‌ எதிரே கூடிற்று! அந்த நெஞ்சழுத்தக்‌காரன்‌ அங்கு நின்றபடியே, அரசாட்சியிலே உள்ள கேடுகளையும்‌ ஊழல்களையும்‌ விளக்கலானான்‌! வெட்கப்பட்ட அதிகாரிகள்‌, அவனைச்‌ சிறைக்குள்‌ போட்டு மூடினர்‌, அரசாங்கத்தின்‌ மானம்‌ பறிபோகும்‌ என்ற அச்சத்தால்‌, சிறையிலே லில்பர்ன்‌, பட்டினி கிடந்து சாகட்டும்‌ என்று விட்டுவிட்டனர்‌; உடனிருந்த கைதிகள் தங்களுக்குத்‌ தரப்பட்ட உணவில் சிறிது சிறிது கொடுத்து. உயிர்‌ பிழைக்க வைத்தனர்‌. இவ்வளவு கொடுமைக்கு ஆளான லில்பர்ன்‌, இருபதாண்டு நிரம்பிய வாலிபன்‌! மக்கள்‌ எவ்வளவு உருகியிருப்பர். அவன்பட்ட கொடுமை கண்டு! அந்தக் கண்ணீர், வலுவளிக்கும் மாமருந்து என்பதை மமதையாளர்‌ உணரவில்லை.

பிரையின்‌ என்றோர்‌ வழக்கறிஞர்‌ சன்மார்க்கத்தைக்‌ கட்டிக்‌ காப்பாற்ற வேண்டும்‌ என்பது அவர்‌ நோக்கம்‌, சன்மார்க்கத்தை ஆடல்‌ பாடலாகிய களியாட்டங்கள்‌ குலைத்து விடுகின்றன. ஒழுக்கத்தைக்‌ கெடுக்கின்றன என்று எண்ணினார்‌. ஆடல்பாடல்‌ மிகுந்த தாடகங்கள்‌, பிரான்ஸ்‌ நாட்டிலிருந்து பிரிட்டனுக்குப்‌ பரவின. அரசனும் அரசியும் அவைகளை ஆதரித்தனர். பிரையின், இக்காரணம் பற்றியும் வெறுப்புற்றார். எனவே இவைகளை கண்டித்து நூலென்று வெளியிட்டார். அவருடைய இந்த நூலினால் என்ன கெடுதல் ஏற்பட்டுவிடும்! ஒழுக்கத்தை வளர்க்கும்‌ நாடகங்கள்‌ தேவை, வீண்‌-