73
ணமக் களியாட்டங்கள் கேடானவை என்ற எண்ணம் வளரும். மனிதனைக் கெடுப்பது, ஆடல் பாடல் அல்ல; கெட்டவன் ஆடல் பாடலைத் தன் கெடுமதிக்குத் தக்க வண்ணம் பயன்படுத்திக் கொள்கிறான். மற்றவர், மனமகிழ்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வர், என்று அவருக்கு விடை அளித்திருக்கலாம். ஆனால், அடக்குமுறை ஆட்சியல்லவா!
பிரையின், வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டார். 5000–பவுன் அபராதம்; வழக்கறிஞர் வேலைக்கு ஏற்றவராகார் என்று தண்டனை; காதுகளை வெட்டிவிடும்படி உத்தரவு; இறுதியாக, ஆயுள் தண்டனை!
அக்ரமம் இதைவிட வேறெப்படி இருக்கமுடியும்? தன் கருத்தை வெளியிட்டார். கலைத்துறை பற்றிய கருத்து! அரண்மனைக்குள் புகுந்து அக்ரமம் புரியும் மன்னனை வெட்டச் சொல்லி அல்ல, கொள்ளை அடிக்கும் அதிகாரிகளைக் குத்தச் சொல்லி அல்ல, சதிபுரியச் சொல்லியுமல்ல. சமர் மூட்டியுமல்ல, சன்மார்க்கம் தழைக்க அமர் கருதிய வழி இது எனக் கூறினார். இது கொலையைக் கொள்ளையை, பலாத்காரத்தை, பயங்கரத்தை, ராஜத் துரோகத்தை, மதத்துரோகத்தை மூட்டக் கூடியதல்ல, சிந்தனையைக் கிளறி, சீரழிவைத் தடுக்கக் கூடிய ஏடு, இதற்காக, ஆயுள் தண்டனை! காதுகளை வெட்டிவிடுவது!
இந்தக் கடுந்தண்டனை தருவதற்காக, எப்போதோ ஒரு நாளில், மூன்றாம் எட்வர்டு எனும் மன்னன் காலத்தில் இயற்றப்பட்டு, உபயோகப்படுத்தப்படாததால் துருப்பிடித்துப் போய்க்கிடந்த ஒரு சட்டத்தை எடுத்து வீசினர்.