74
பேசினார் எலியட்–சிறையில் மாண்டார்! அவராவது ஆட்சியை எதிர்த்தார். இவர் ஆட்சியைக்கூட எதிர்க்கவில்லை, ஆனால் ஆயுள் தண்டனை. எவ்வளவு பேருடைய உடலும் உள்ளமும் பதறிப்போயிருக்கும், இந்தக் கடுந்தண்டனை பற்றிக் கேள்விப்பட்டபோது. இப்படியும் ஒரு ஆட்சியா! என்ற எண்ணம் எவர் உள்ளத்தில்தாண் எழாமலிருக்கமுடியும்!
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அந்த அஞ்சா நெஞ்சினன், உறுதியைத் தளரவிடவில்லை. இந்த அக்ரம ஆட்சியில் இது எதிர்பார்க்கப்படவேண்டியதே என்று எண்ணினார். சிறையினின்றும் கூட, லாட்போன்ற மார்க்கத்துறையினர் நடாத்தும் அக்ரமத்தைக் கண்டித்து எழுதி வந்தார்!
மனமார நம்பும் கொள்கையின்படி, வாழ இது இனி இடமல்ல, என்று கருதியபலர், பிரிட்டனைவிட்டே சென்றுவிட்டனர்; சிறப்பாக, தூய்மையாளர் என்றமதப் பிரிவினர், கடல் கடந்து, தூர நாடுகள் சென்று வாழலாயினர். சிலர் மட்டும், அடக்கு முறையின் கூர்மழுங்குமளவு, மார்காட்டி நின்றாகவேண்டும் என்ற துணிவுடன் பணியாற்றினர்.
சிறைக்குள் இருந்த வண்ணமும் எழுதிக்கொண்டிருந்த பிரையினுக்கு, மேலும் ஓர் தண்டனை தரப்பட்டது; ராஜத் துரோகி, நிந்தனை கூறுவேன் என்ற பொருள்பட எஸ். எல். என்ற எழுத்துக்கள் அவருடைய கன்னத்தில், சூடிட்டுப் பொறித்தனர்! நெடுந்தூரச் சிறைக்குத் துரத்தினர் மூவரையும்! மக்களோ அம்மூவருக்கும் தமது நெஞ்சில் இடமளித்துப் போற்றினர். சவுக்கடி தந்தனர் மூவருக்கும்; மக்கள், தங்கள் இதயத்தை மன்னன் சவுக்கால் அடிக்கிறான், எழுத்தாளர்-