79
வைத்தால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று வீரமும் நாட்டுப் பற்றும் வீறிட்டெழும் உள்ளத்துடன் கூறிக்கொண்டு, கையில் துப்பாக்கியுடன் காட்சி தந்தார், ஹாமில்டனின் அன்னை.
ஓடினான் மன்னனிடம், விபரீதமாகிவிடும், வேண்டாம் இச்சமர், பகையை விடுக, என்று மன்றாடினான், மன்னன் மயங்கினான்—சமரசப் பேச்சுக்கு இடமளித்தான். ஆனால், வென்ட்ஓர்த் விடவில்லை; தூண்டினான்; ஒரு கை பார்த்தே ஆகவேண்டும்; ஸ்காத்லாந்து மக்களுக்கு இப்போது பணிந்துவிட்டால், நாளை பிரிட்டிஷ் மக்களும் கிளம்பிடுவர், எனவே சமரிட்டே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், மாமன்றத்தைக் கூட்டி, போர் இருக்கும் காரணத்தைக் காட்டி, பணம் பெறலாம், என்ற யோசனை கூறினான். பேழையைத் திறந்தால் பெரும் பொருள் கிடைக்கும் என்று மன்னனிடம் வென்ட்ஒர்த் கூறினான். ஆனால் அந்தப் பேழையில் இருந்தது என்ன? வஞ்சம் தீர்த்தாகவேண்டும் என்ற உறுதி காட்சி அளித்தது.
மக்கள் சார்பாகப் பேசி, வீடெல்லாம், நல்லோர் நெஞ்சமெல்லாம் நிரம்பியிருந்த பிம் ஆளும் முறையாக அமர்ந்தான் மாமன்றத்தில்; நாட்டைக் கலக்கிய வழக்குகளை நடாத்திய ஹாம்டன் அரச வழக்கறிஞர்களைத் திணறடித்த அறிவாற்றல் மிக்க செயிண்ட்ஜான், அனைவரும் மாமன்றத்தில், தேர்தல் மூலம் உறுப்பினராயினர்! மன்னனுடைய கோபத்துக்கு ஆளானவர்களை மக்கள் மலர்மாரி பொழிந்து வரவேற்கிறார்கள். மாமன்றம் கூடிற்று, மன்னனுக்கு முடிவுகட்ட! பதினோராண்டுகள் மாமன்றம் கூட்டாமலேயே ஆளமுடியும் என்று எண்ணியிருந்த சார்லஸ், நெருக்கடி நேர்ந்ததும், மாமன்றத்தைக்