உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளியூரில்‌

83

பூபதியார் பதைத்தார்—தலை தலை என்று அடித்துக் கொண்டார்.

வண்டி கிளம்பிற்று, நலந்தாவை நோக்கி. மாடுகளுக்குத் தெரியுமா, நடைபெறப் போகும் ‘நீசத்தனம்’ இப்படிப்பட்டது என்று?

குதிரை வீரர்கள் பத்துப் பேர் ‘ஸ்வாமிகளின்’ ஆட்கள் வந்து கொண்டிருந்தனர் ராமப்பிரசாதனைப் பிடித்திட.

மாட்டு வண்டிக்கும் குதிரைகளுக்கும் போட்டி, முடிவு என்னவாகியிருக்க முடியும்?

வண்டியைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள்.

“ராமப்பிரசாத்! நான் இவர்களுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறேன்—வண்டிக்காரனும் துணை இருக்கிறான்—நீ, மல்லிகாவுடன்...” என்றார் பூபதியார்.

“இந்தக் கொலைபாதகர்களிடம் தாங்கள் சிக்கிக் கொள்வதைப் பார்த்த பிறகா...” என்றான் பிரசாத்.

“அங்கே, நலந்தாவில் ஆயிரக்கணக்கானவர்கள், தம்பி, அவர்கள் நாட்டுக்கு, உலகுக்கு, மனித குலத்துக்கு ஆற்றவேண்டிய தொண்டு, மிகத் தேவையானது...எனக்கென்ன இன்னும் வாழ்வு...”

“ஐயனே, ஐயனே.”

கீழே இறங்குங்கள் மரியாதையாக...உயிர் தப்ப வேண்டுமானால்” என்று கொக்கரித்தனர் முரடர்கள்.

கை கலப்பு மூண்டுவிட்டது—வாட்கள் சுழன்றன—தடிகள் நொறுங்கின—மாடுகள் மிரண்டன—வண்டி உருண்டது—சக்கரத்தில் சிக்குண்ட மல்லிகா, கதறக்கூட இல்லை.

எதிர்ப்புறமிருந்து, பெரிய நெருப்பு ஜ்வாலை பார்த்தார், பூபதியார்—‘ஐயோ, என்னாலே, என் ஏமாளித்தனத்தாலே ஏற்பட்டதே பெரும் அழிவு’ என்று கதறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/83&oldid=1771353" இலிருந்து மீள்விக்கப்பட்டது