உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

எல்லோரும்‌ இந்நாட்டு மன்னர்‌


காரணத்தால்‌? அவர்களுக்குப்‌ பிடித்தமற்ற முறையிலே, சட்டங்கள்‌ இன்று நிறைவேற்றப்‌படுகின்றன, என்ற கசப்பா? அல்லது, இன்று சட்டமியற்றும்‌ பொறுப்பும்‌ உரிமையும்‌ பெற்‌றுள்ள தமது கட்சியினர்‌, இனி அந்த நிலையினின்றும்‌, விரைவிலே தள்ளப்பட்டுப்‌ போவார்கள்‌; அவர்களைக்‌ காப்பாற்றவேண்டுமானால்‌, யார்வேண்டுமானாலும்‌ சட்டமன்றத்துக்குச்‌ செல்லலாம்‌ என்ற முறையையே மாற்றிவிட வேண்டும்‌ என்று எண்ணுகிறாரா!

சட்டமன்றம்‌ செல்வதற்குச்‌ சில தகுதிகள்‌ இருக்கவேண்டும்‌ என்பது முறையானால்‌, சட்டமன்றத்துத்‌ தேர்தலில்‌ ஈடுபட்டு ‘ஓட்‌’ அளிக்கவும்‌, சில தகுதிகள்‌ இருக்கவேண்டும்‌, அல்லவா? அதாவது, வயது வந்த எல்லோருக்‌கும்‌ ‘ஓட்டு’ என்ற முறை இருக்கக்கூடாது என்று ஏற்படுகிறது. அப்படியாகுமானால்‌, நாடு, வெள்ளைக்காரர்‌கள்‌ ஆட்சி நடத்தி, முணுமுணுத்துக்கொண்டே, சிறிது சிறிதாக, அரசியல்‌ உரிமைகளை மக்களுக்கு அளித்தார்களே, அந்தப்‌ பழைய காலத்துக்கன்றோ இழுத்துச்‌ செல்லப்படும்‌! அதனைத்தானே, ஐம்பது அறுபது ஆண்டுகளாக, எதேச்சாதிகாரம்‌, பிற்போக்கு அரசியல்‌, என்றெல்லாம்‌, பாபுவின்‌ சகாக்கள்‌ கண்டித்தனர்‌.

இப்போது, எதேச்சாதிகாரமும்‌, பிற்போக்கு அரசியல்‌ முறையும்தான்‌ தேவை, என்ற முடிவுக்குக் காங்கிரஸ்‌ வந்துவிட்டது என்பதைத்தான்‌ பாபுவின்‌ பேச்சு முன்கூட்டியே அறிவிக்கிறதோ என்ற அச்சம்‌ எவருக்கும்‌ ஏற்படத்தான்‌ செய்யும்‌.

சுதந்திரம்‌ பெற்ற உடன்‌, எமது காங்கிரஸ்‌ கட்சிதான்‌, எல்லா மக்களுக்கும்‌ ஓட்டுரிமை வாங்கிக்கொடுத்தது என்று மார்தட்டிக்‌ காங்கிரஸ்‌, இனி வெகு விரைவில்‌, கொடுத்த