உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எல்லோரும்‌ இந்நாட்டு மன்னர்‌

15


ஓட்டுகளைப்‌ பறித்துக்கொண்டு, எதேச்சாதிகார அரசியல்‌ முறையை அமுல்‌ நடத்தப்‌ போகிறதோ, என்னவோ, யார்‌ கண்டார்கள்‌,

எகிப்து நாட்டிலே, படைபலம்‌ காட்டி, ஆட்சியைக்‌ கைப்பற்றியுள்ள, நாசர்‌ நல்லவர்‌, திறமைமிக்கவர்‌, இலட்சியவாதி—எல்லாம்‌ உண்மை. ஆனால்‌, அவர்‌, நான்‌ பார்த்து, ஒத்துக்கொள்வது மட்டுமே அரசியல்‌ கட்சி என்ற உரிமையைப்‌ பெறமுடியும்‌—மற்றவை தலைகாட்டக்கூடாது என்று கூறிவிட்டார்‌.

அவருடைய சொல்லே சட்டம்‌! ஏனெனில்‌, அந்தச்‌ சொல்லுக்கு வலிவளிக்கப்‌, பெரும்படை தயாராக இருக்கிறது.

அவர்‌ போன்றே, இந்தோனேசிய அதிபர்‌ சுகர்ணோவும்‌, அரசியல்‌ கட்சிகளுக்கு, இன்னின்ன இலக்கணம்‌ இருக்கவேண்டும்‌; இவ்விதம்‌ நடந்துகொள்ள வேண்டும்‌, இல்லையென்றால்‌, அந்தக்‌ கட்‌சிகளின்‌ சீட்டுக்‌ கிழிக்கப்பட்டுவிடும்‌, என்று அறிவித்துவிட்டார்‌.

உரிமைகள்‌ பற்றிய ஆர்வமற்றவரோ, டாக்டர்‌ சுகர்ணோ? இல்லை! நிரம்பப்‌ பேசி இருக்கிறார்‌, ஐக்ய நாடுகள்‌ மன்றத்திலே!!

தம்பி! இந்தப்‌ பெரும்‌ தலைவர்களின்‌, வியப்பூட்டும்‌ பேச்‌சுகளைப்‌ பார்க்கும்போது, இவர்கள்‌ ஒவ்வொருவரும்‌, தமக்கு எவை சாத்தியமோ, பிடித்தமோ, அவைமட்டுமே, மக்களுக்கு நல்லாட்சி ஏற்படுத்தித்‌ தரத்தக்கன; மற்ற எல்லா முறைகளும்‌, தீது பயப்பன! எனவே, தேவையற்றன, நீக்கத்தக்கவை என்று கருதுகிறார்கள்‌ என்பது மிக நன்றாகத்‌ தெரிகிறது.

உலகப்‌ பெருந்தலைவர்கள்‌ கூடிப்‌, போர்க்கருவிகளை ஒழித்திட, மாநாடு நடாத்துகிறார்களே, தம்பி! கூர்ந்து பார்த்‌தால்‌, ஒவ்வொரு தலைவரும்‌, தம்மிடம்‌ இல்லாத போர்க்‌