16
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
கருவிகள், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது தமக்குச் சாத்யமாகாத எந்தப் போர்முறையும் திட்டமும், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது, என்பதைத் தான், மிகச் சாமர்த்தியமாக பேசி வருவது புரியும்.
1932ல் ஜெனிவா நகரில் போர்க்கருவிகள் ஒழிப்புக்கான மாநாடொன்று நடைபெற்றது. சோவியத் நாட்டு லிட்வினாப் இப்போது குருஷேவ் வலியுறுத்தியது போலவே, போர்க்கருவிகள் ஒழிக்கப்படவேண்டும் என்ற திட்டம் கொடுத்துப் பேசினார்.
அப்போது, ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்திருந்த மாட்ரியாகா என்பவர் ஒரு கதை கூறினார்.
காட்டிலே உள்ள மிருகங்களெல்லாம் கூடி, ஒன்றை ஒன்றுகொன்று குவித்திடும் கொடுமையை ஒழிக்க வழிவகை என்ன என்று மாநாடு நடத்தின. காட்டரசனான சிங்கம், கெம்பீரக் குரலில், கழுகைப் பார்த்தபடி, நாமெல்லாம் கூர்மையான மூக்குகளை ஒழித்துவிடவேண்டும், என்று கூறிற்று; புலி, யானையைப்பார்த்தபடி, ஒழிக்கப்படவேண்டியது தந்தங்கள்! என்று பேசிற்று; யானையோ, புலியைப் பார்த்துக் கொண்டே, கோரமான பற்களையும் கூரான நகங்களையும் ஒழித்தாக வேண்டும் என்று முழக்கமிட்டது இப்படி ஒவ்வொரு மிருகமும், தன்னிடம் எது இல்லையோ எதை வைத்துக்கொண்டு, மற்ற மிருகங்கள் சொல்லும் வலிவு பெறுகின்றனவோ, அவைகளை ஒழித்துவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் பேசின. கடைசியாகக், கரடி எழுந்தது கனிவுடன், சொல்லும் செயலுக்குப் பயன்படும். எல்லாமே ஒழிக்கப்படத்தான் வேண்டும்—கொடி வாய், கூரான நகம், நீண்ட கூரிய மூக்கு—எல்லாம்—புவியெங்கும் இருந்து வருகிற, கட்டித் தழுவிக்கொள்ளும் முறை தவிர, மற்றதெல்லாம், ஒழிக்கப்பட்டாக வேண்டும், என்று கூறிற்று.
தம்பி! கரடி, கட்டிப்பிடித்தே மற்றதைக் கொல்லவல்லது. எனவே, கரடி, அதுமட்டும் இருக்கவேண்டும்.