உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏ, தாழ்ந்த தமிழகமே!

17

பத்துப் பேர்கள்

ஆனால், அவைகள் வளரக்கூடாது என்று ஒரு பத்துப் பேர்கள் - அந்தப் பத்துப் பேர்களுடைய பெயரையும் அரசியல் மேடையாயிருந்தால் குறிப்பிட்டிருப்பேன். இஃது அறிவு மேடையானதால் குறிப்பிடாமல் விடுகிறேன். கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களெல்லோரும், தங்களைத் தவிர வேறு யாரும் சங்க இலக்கியங்களை அறிய முடியாது; அப்படியே அறிந்தாலும் பொதுமக்களின் ஆதரவிற்குத் தங்களைத் தவிர வேறு யாரும் அருகதை அற்றவர்கள் என்று கருதுகிறார்கள்.

கையில் ஊமையர்

ஒரு மாதத்திற்கு முன் சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையில், ஓர் உவமையைப் படித்தேன். இந்தக் காலத்தில் கற்பனைநிலை எவ்வளவு தூரம் கயமைத்தனத்திற்குப் போயிருக்கிறது என்பதை ஊகித்தேன். வித்தியாசததைப் பாருங்கள்! இந்தக் காலத்துப் புலவர்கள் எந்தக் கருத்தை ஓர் அந்தாதி மூலமாகவோ, வெண்பா மூலமாகவோ விளக்குவார்களோ, அதைக் குறுந்தொகை ஆசிரியர் ஒரே அடியில் கூறிவிட்டார். அந்த அடிதான் ‘கையில் ஊமையன்’ என்பதாகும்.

ஒரு தோழன் காதலிலே ஈடுபடுகிறான். உவமையின் நேர்த்தியைப் பாருங்கள்! சுட்டுக்கடங்காத காளை; இருந்தாலும் கட்டுப்படுகிறான் இரு கண்களுக்கு. மனத்தில் ஏதோ நினைக்கிறான். அதை எதிரேயுள்ள கட்டழகியிடம் சொல்ல முடியவில்லை; எதைப்போல என்றால் - காலை நேரம். காட்டிலே ஓர் பாறையிலே வெண்ணெய் இருக்கிறது; கையில் ஊமையன் இதற்குக் காவல்; காலைக் கதிரவன் காலையில் எழுந்து தனது இளங்கதிர்களைப் பாய்ச்சுகிறான். வெண்ணெய் உருகுகிறது. வெண்ணெய் உருகுவதைப் பார்க்கிறான். பார்த்ததும் ‘ஐயோ! வெண்ணெய் உருகு-

2