பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 அகத்திணைக் கொள்கைகள் போந்து பல்லாண்டுகள் தமிழ் வாழ்வு வாழ்ந்து தமிழகப் பெருஞ் செல்வருள் ஒருவனாகத் திகழ்ந்த வடநாட்டுக் குறுநில மன்னன் யாழ்ப் பிரகத்தன் என்ற அறிவு மதுகையுடைய சான்றோனுக்கு எம் மொழியிலும் அமையாத தமிழ்ப் பொருளிலக்கணத்தை அறிவித்தற்பொருட்டுப் பாடி யருளியது குறிஞ்சிப் பாட்டு. 261 அடிகளால் அமைந்த இப்பாட்டில் பலதுறைகளுக்கு இடன் உண்டு; எனினும் எல்லா அடிகளும் அற ந்தொடு நிலை என்னும் ஒரு துறை நோக்கியே செல்லுகின்றன. அறத்தொடு நிலை என்ற துறைமேல் எழுந்த பாடல்களில் முன்னிகழச்சிகள் ஒரளவேனும் நுவலப்பெறும். தோழி செவிலிக்கு தலைவியின் மறை வொழுக்கத்தைப் புலப்படுத்தும்போது தலைவிக்கு ஒருவனோடு உறவு கொண்ட காரணங்களைத் தொடர்புபடச் சொல்லும் கடப் பாடு உடையவள் என்பதுவே இதற்குக் காரணமாகும். ஒரு துறைக்கு ஒரு பாட்டாகப் பொறுக்கி எடுத்து வேற்று மொழி யனுக்குக் கற்பித்தல் அருமை என்ற காரணத்தால் தாமே களவுத் துறைகள் பலவும் அடங்க ஒரு பாடலை இயற்றிக் கொண்டார் என்பது எண்ணத்தக்கது. களவொழுக்கப் பகுதிகள் பல் பாட்டில் வருதலின் குறிஞ்சிப்பாட்டு எனவும் பெயரிட்டு வழங்கினர். நிகழ்ந்த வண்ணம் நீநனி உணரச் செப்பல் ஆன்றிசின் சினவா தீமோ..”* என்று தோழி அடிக்கல் நாட்டுவதிலிருந்தே குறிஞ்சிப்பாட்டு ஒரு கோவைப் பாட்டு என்பது தெளிவாகின்றது. தலைவியும் தோழியும் தினைப் புனம் காக்கச் செல்லல், சுனையாடிப் பூக்கொய்து கிளியோட்டல், நாய்கண்டு அஞ்சல், இளைய வீரன் ஒருவன் எதிர்ப்படல், அவன் தான் எய்த விலங்கினங்களைக் காண்டிரோ என வினவுதல், தலைவியும் தோழியும் மறுமொழி கூறாது வாளாவிருத்தல், களிறு தருபுணர்ச்சி, யாறு தரு புணர்ச்சி, பகற்குறி இரவுக் குறிகள், இரவுக்குறி இடையீடுகள் ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்பாக இப்பாட்டின்கண் இழையோடுகின்றன, என்ற போதிலும், இந்த நீண்ட பாடல் ஒரு துறையின் விளக்கம் என்பதைப் பாட்டின் தொடக்கத்திவிருந்தே அறிந்து கொள்ளலாம். 13. குறிஞ்சிப் பாட்டு - அடி 33 - 34