பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 அகத்திணைக் கொள்கைகள் இரவினும் பகளினும் நீவா என்றலும் கிழவோன் தன்னை வாரல் என்றலும் நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும் புரைபட வந்த அன்னவை பிறவும் வரைதல் வேட்கைப் பொருள என்ப.' என்று விதி செய்து காட்டுவர். இற்செறிப்பினால் தலைவிக்கு ஏற்படும் மன நோயினால் உடலிலும் மாற்றம் காணப்பெறும். தாயர் இது தெய்வத்தி னால் ஏற்பட்டதென்று கவன்று கட்டுவிச்சியின் துணைக்கொண்டு குறிபார்த்தலுக்கும் வேலனைக்கொண்டு வெறியாட்டயர்தலுக் கும் வழியமைப்பர். இவ்வமயம் தோழி அறத்தொடு நின்று உண்மை நிலையை உணர்த்துவள். இதன் விரிவினைக் குறிஞ்சிப் பாட்டில் கண்டு மகிழலாம். பெற்றோர் அவள் காதலித்த தலைவனுக்கு ஒருப்படாத நிலையில் உடன் போக்கு நிகழும். இல்லாத நிலையில் இந்து இறுதி வழியாக மேம் கொள்ளப்பெறும். இவ்வழியை மேற்கொள்ளுங்கால் உயிரினும் மேலாகக் கருதப்பெறும் தலைவியின் நாண் அழியச் செய்யும். ஆயின் அவள் நாணைவிட கற்பு உயர்ந்ததன்றோ? உயிரினும் சிறந்தன்று நானே நாணினும் செயிர்திர் காட்சிக் கற்புச் சிறந் தன்று* என்பது தொல்காப்பிய விதி. உடன் போக்கினை மேற்கொள்ள இருக்கும் குறுந்தொகைத் தலைவி யொருத்தியின் கூற்று ஈண்டு கருதத்தக்கது. தோழியே, நாணம் மிக நெடுங்காலம் நம்முடன். இருந்து வருந்தியது. இனிமேல் வெள்ளிய பூவையுடைய கரும்பின் உயர்ந்த மணலையுடைய சிறிய கரை நீர் நெருங்கி அடித்த லால் அழிந்து வீழ்ந்தாற் போல, அது (நாண்) தடுக்கும் வரையில் தடுத்து, காமம் மேன்மேலும் நெருக்குதலால், என்பால் நில்லாது போய்விடும்.அஃது இரங்கத்தக்கது' இன்து நொதுமலர் வரைவு நோக்கித் தலைவி தோழியிடம் கூறியதாகும். ஐங்குறுநூற்றுத் தலைவியொருத்தி இடைச் சுரத்தில் கண்டோரை நோக்கித் தன் போக்கினைத் தன் தாய்க்கு உரைக்குமாறு வேண்டுகின்றாள். 55. பொருளியல் - 15' 56. களவியல்-23 57. குறுந்-149