பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிப்பொருள் ஒன்றே துவலும் பாடல்கள் 435 [அறஞ்சாலியர்-தனக்குரிய அறத்தானே என்றும் நிறைக: வறன்.வற்கடம், பஞ்சம்; வாள்-ஒளியுடைமை; கோள். கொள்கை; என்னை-எம்பெருமான்). தலைவியை ஒம்படை செய்து தலைவனுடன் உடன் போக்கிய பின்னர், தலைவியின் தமையன்மார் செய்தியறிந்து பின் தொடர்ந்து போய்க் காணப்பெறாமல் வறிதே மீண்டனர். பின் னொருநாள் தலைவன் இல்லத்திற்குச் சென்ற தோழி அவளை நோக்கி உற்றது வினாவ, தலைவி தலைமகன் மறைதற்குத் துணை நின்ற மலையை வாழ்த்தியதாக அமைந்தது இப்பாடல். மாத ருண்கண் மகன்விளை யாடக் காதலித் தழிஇ யினிதிருந் தணனே தாதார் பிரசம் ஊதும் போதார் புறவின் நாடுகிழ வோனே.” (உண்கண்-மை ஊட்டப்பெற்ற கண்; தழிஇ-தழுவிக் கொண்டு; பிரசம்-தேன். போது-மலர்; புறவு-முல்லை நிலம்) - - கற்புக் காலத்தில் தலைவன் மனைக்குச் சென்று மீண்ட செவிலி தலைவியும் தலைவனும் உயிரும் உடம்பும்போல் அன்பால் கலப்புற்று இன்புற்றமர்ந்து வாழ்கின்ற நல்வாழ்க்கையின் மாண்பினை நற்றாய்க்குக் கூறி மகிழும் செய்தியை இப்பாடல் தெரிவிக்கின்றது. மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே அரும்பிய குணங்கின் அம்பகட் டிளமுலைப் பெருந்தோள் நுணுகிய நுசுப்பிற் கல்கெழு கானவர் நல்குறு மகளே.' (வைப்பு-போகம்; சுணங்கு - தேமல்; பகடு - பெருமை; துணுகிய-நுண்ணிதாகிய நுசுப்பு-இடை, கல்கெழு-கற்கள் பொருந்திய, நல்குறு மகள்-பெற்றமகள்.) இவளைப் பிரியின் காமநோய்க்கு மருந்தில்லை யென்றும், அம் மருந்தும் தான் இன்பம் பெறும்பொருட்டுத் தேடிச் செல்ல எண்ணிய செல்வமும் இவளே யாதலின் இவளைப் பிரிந்து செல்லுதல் இயலாது என்றும் தலைவன் சொல்லியதாக அமைந்தது. இப்பாடல். 13. டிெ-406 14. குறுந் - 71