பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 521 பெருமையும் இவர்க்கு உண்டு. வள்ளல் பாரியின் கெழுதகை நண்பர். பெரும்பாலும் பாரியினது பறம்பு மலையில் அதிகம் பழகினவராதலராலும் இவர்தம் அரசத் தோழர்களான பேகன், காரி, செல்வக் கடுங்கோ மலைநாடுகளை ஆண்டவர்களாதலாலும் குறிஞ்சித் திணையைப் புனைந்து பாடுதலில் வல்லவராயினார் என்று கருதலாம். கபிலர் பாடிய அகப் பாடல்கள் 197. சங்க நூல் களில் பத்துப் பாட்டிலும் (குறிஞ்சிப் பாட்டு) பரிபாடல் நீங்கலாக ஏழு தொகை நூல்களிலும் இவர்தம் பாடல்கள் உள்ளன. பெருந்தினைபற்றி இவர் யாதும் பாடிற்றிலர் என்பது டாக்டர் 6] టిfL! மாணிக்கனார் அவர்களின் ஆய்ந்த முடிவு." அகத்திணைக்கண் பயின்று வரும் பல புனைவுகட்கு உண்மைப் பொருள் கண்டு தெளிதல் வேண்டும். அப்பொழுதுதான் அகத்திணை மாந்தர்களின் உள்ளத்தின் ஆழத்தையும், உணர்ச் சியின் வாயிலையும், கவிஞரின் பாடு திறனையும் பாங்குறப் புரிந்து கொள்ள முடியும். தலைவன் பிரிந்தால் தலைவி இறந்து படுவாள் என்ற தோழியின் கூற்றுக்குப் பிரிவு வருத்தம் இறப்பிற்கு ஒப்பப் பெரிதாகும் என்பது குறிப்பு. புறவொழுக்கம் ஒழுகிய தலைவன் தலைவியின் கால்மேல் வீழ்வான் என்பது மருதப் புனைவு. - மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியுள் உரிய." என்பது தொல்காப்பியம். இதனால் அறியப்பெறுவது தலைவன் தன் குற்றத்தை உடன்பட்டு நாணிப் பணிந்து வேண்டுவான் என்பது. கன்னிப் பெண்களை ஐயப்பட்டு வெளியில் செல்லற்க என அன்னை கோலால் அடிப்பாள் என்று பாடு பெறும். மிகக் கடிந்து உரைப்பாள் என இதற்குப் பொருள் கொள்ளல் வேண்டும். களவொழுக்கத்தைக் கற்பனைத் திறத்துடன் பாட வல்லவர் கபிலர். களவின் பல துறைகளும் இவரிடம் பாடுபெறுகின்றன. களவுத் துறைகளுள்ளும் வரைவுத் துறைகளை விரும்பிப் பாடும் இயல்பினர் என்பதும் அறியக் கிடக்கின்றது. அமிழ்தினுமினிய தமிழ் மொழியின் மீது ஆராக் காதல் கொண்டு தமிழகத்திற்குப் 11. தமிழ் காதல் (இரண்டாம் பதிப்பு) - பக். 405, 409. 12. பொருளியல் - 31.