பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

அணுவின் ஆக்கம்


காற்றினிடையே புதிர்க்கதிர்களைப் பாய்ச்சினால் காற்றிலுள்ள அணுக்கள் அயனிகளாகின்றன. இந்த அயனிகள் தெள்ளிய பனித்துளிகள் திரளுவதற்குப் பற்றுக் கோடுகளாக அமைகின்றன. சாதாரணமாகக் குளிரும்பொழுது பனித்திரள்கள் திரளும் எண்ணிக்கையைவிட அந்தக் காற்றினிடையே புதிர்க் கதிர்களைப் பாய்ச்சும்பொழுது துளிகளின் எண்ணிக்கை மிகுகின்றது. இந்த ஆராய்ச்சியின் பயனாக அவர் 1912-ல் மேக அறை என்னும் ஒரு புதிய கருவியை அமைத்தார். (படம்-23). உள் வீடு இல்லாத ஒரு

பெரிய உருட்டுக் குழை. அதற்குள்ளே ஓர் ஊடு இயங்கியின்6 மேல்தட்டு அதனை அடைத்துக்கொண்டிருக்கிறது. இந்தத் தட்டின்மேல்தான் நீர்த்துளிகளை எழுப்பி ஒளியில் படம் எடுக்க வேண்டும். ஒளியான நீர்த்துளி நன்கு படத்தில் விழுவதற்காக இந்தத் தகட்டின் மேற்புறம் கருப்பு நிறம் பூசப்பட்டிருக்கும்; அல்லது கருப்பு மயிர்ப்பட்டுத்7 துணி போர்த்தப் பெற்றிருக்கும். இந்தத் தட்டின் கீழுள்ள


6ஊடு இயங்கி-piston.7 மயிர்ப்பட்டு-velvet.