பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு ஆராய்ச்சிக்கருவிகள்

159


காற்றைத் திடிர் என்று நீக்கலாம். கீழேயுள்ள குழையின் மூடியைத் திறந்ததும் அந்தக் காற்று கீழிறங்கி வெற்றிடக் குமிழில் புகும். தாங்கி நிற்கும் காற்று வெளிப்பட்டதும் இத்தட்டு வானகத்தே செத்த குருவிபோல் கீழே விழும். இப்பொழுது உருட்டுக் குழையிலுள்ள ஆவிக்குப் புழங்க முன்னினும் இடம் மிகுகின்றது. ஆவி உடனே பரவுகிறது. பனித்துளி திரளுவதற்கேற்ற பரவு வீத நிலை இங்கு உண்டு. ஆவி குளிரத் தொடங்கியதும் பனித்துளி எழுகிறது. உடனே ஆல்பா - கதிர்கள் உள்ளே பாய ஏற்பாடு உண்டு. அப்பொழுது அந்தக் கதிரைச் சுற்றி எழுகின்ற அயனிகளைப் பற்றிக்கொண்டு நீர்த்துளிகள் எழும். இந்த நீர்த்துளிகள் நன்கு விளங்குவதற்காக ஒளி பாய்ச்சப் பெறும். நீர்த்துளிகள் திரளும் இடமே ஆல்பா - கதிர்கள் செல்லும் வழி. இவை மேலே அமைக்கப்பெற்றிருக்கும் புகைப் படத்தில் விழும். இரண்டு புகைப்படம் பிடித்துக் கனவுருவைக்8 காட்டவும் செய்யலாம். அங்கே மின் மண்டலம் இருப்பதால் எதிர் மின்னூட்டம் பெற்ற அயனித் துளிகள் மேலே எழும். நேர் மின்னூட்டம் பெற்றவை கீழே இறங்கும், எனவே, படத்தினைப் பார்த்தே இவற்றின் மின்னூட்டத்தினையும் கூறி விடலாம். ஆல்பா - கதிர் கனமுள்ள நீர்க் கோடாகத் தெரியும்; நேர் இயல் மின்னி மயிரிழை போலத் துளிகள் விட்டுவிட்டு இருக்கக் காணலாம். நைட்ரொஜன் உயிரியமாக மாறியதை இத்தகைய படத்தில் காணலாம். இந்தப் படத்தில் நைட்ரொஜன் கோடு கவடு போல் பிரிகின்றது. மெல்லியது பிரிந்த நீரியக் கரு; அழுத்தமாகத் தெரிவது நைட்ரொஜனும் பரிதியமும் சேர்ந்து எழுந்த உயிரியமாகும். இத்தகைய படத்திலிருந்து தான் 1931-ஆம் ஆண்டில் எதிர் இயல் மின்னி9 போன்றும் இழை போன்றும் இருக்கின்ற கோட்டினைக் கண்டனர். ஆனால், அது நேர் மின்னூட்டம் பெற்றதாகக் கீழே இறங்கித் தோன்றியது. இதனால் எதிர் மின்னி போல் எடையுள்ளதாயும், ஆனால் அதற்கு மாறாக நேர் மின்னூட்டம்


8கனவுரு-sterioscopic vision.
9எதிர் இயல் மின்னி-meson.