உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அதிசயப் பெண்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசகுமாரன் சோதனை

41

தன் கணவன் என்று உணர்ந்திருப்பாள். ஆனால் கவனிக்கவில்லை. உத்தமி அல்லவா?

அவள் சற்றே புன்னகை பூத்தாள்; பிறகு அழுதாள்.

அரசகுமாரன், “இதென்ன? வெயிலும் மழையும் தொடர்ந்தாற்போல் வருகின்றனவே!” என்று தன் குரலை மாற்றிக்கொண்டு கேட்டான்.

அமுதவல்லி, “ஆம்; உம்முடைய ராஜ வைபோகத்தைக் கண்டு, நீர் முற்பிறப்பில் புண்ணியம் செய்தவர் என்று எண்ணிச் சிறிதே நகைத்தேன். ஆனால் இப் பிறப்பில் மற்றோருவன் மனைவியை விரும்பும் பாவத்தினால் அடுத்த பிறவியில் என்ன ஆவிரோ என்று அஞ்சி அழுதேன்" என்றாள்.

“கயிற்றை அவிழுங்கள்” என்று அரசகுமாரன் தன் இயற்கையான குரலில் சேவகர்களுக்கு உத்தரவிட்டான். அமுதவல்லி நிமிர்ந்து பார்த்தாள். என்ன பார்க்கிறாய்? உன்னைப் பலவகையிலும் சோதித்த உன் புருஷன்தான் நான்" என்றான் அரசகுமாரன்.

அமுதவல்லி ஆசையோடு அவன் முன் சென்று அவன் திருவடிகளை வணங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/43&oldid=1482993" இலிருந்து மீள்விக்கப்பட்டது