பக்கம்:அதிசயப் பெண்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.40

அதிசயப் பெண்

“நான் போய் வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டுச் சென்றான் அரசகுமாரன். பிறகு சில உறவினர்களுடன் வந்து அமுதவல்லியைக் கல்யாணம் செய்து கொண்டான். அப்போதும் தான் ராஜகுமாரன் என்று அவன் சொல்லவில்லை. திருமணம் முடிந்தவுடன் அவளை அங்கேயே விட்டுவிட்டுப் போனான்.

ஒரு நாள் நாலைந்து சேவகர்களை அமுதவல்லியிடம் அனுப்பி, “இந்த நாட்டு ராஜகுமாரன் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறான்” என்று சொல்லச் சொன்னான். அவள், “நான் முன்பே கல்யாணம் ஆனவள்” என்றாள்.

“ஆனாலும் குற்றம் இல்லை; உன் அழகைக் கண்டு அவர் ஆசைப்படுகிறார், ஆடை ஆபரணம் எல்லாம் நிறையத் தருவார்” என்றார்கள்.

அவள் முதலில் சாந்தமாக மறுத்தாள். வரவர அவர்கள் அதிக ஆசை காட்டினார்கள். அவள் புலி போலச் சீறி விழுந்தாள். கடைசியில் சேவகர்கள் அவளைக் கயிற்றினால் கட்டிக்கொண்டு போனார்கள்.

ராஜகுமாரன் மாணிக்கக் கிரீடமும் பொன்னாடையும் புனைந்து சிங்காதனத்தில் வீற்றிருந்தான். எங்கும் ஒரே பிரகாசமாக இருந்தது. அவனுக்கு முன்னே அமுத வல்லியைக் கொண்டுபோப் நிறுத்தினார்கள். அவள் அவன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சிங்காதனத்தையும் அவன் அரசக் கோலத்தையும் கண்ட அவன் முகத்தை உற்றுக் கவனித்திருந்தால் அவனே