பக்கம்:அமுதவல்லி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156. அமுத வல்லி

“தில்லை நாயகி. நான் உன்னை இரண்டாந்தாரமாகக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முன் வந்தது எனக்காக அல்ல என் மகன் பாபுவுக்காக-என் பார்வதியின் பாபுவுக்காகவே தான்! உன்னோட முதல் பொறுப்பு என்ன தெரியுமோ முதலிலே என் பாபு வுக்கு நீ அம்மா! அடுத்தபடி தான் நீ எனக்குப் பெண் சாதி சம்மதமா? சொல்’ என்று சத்திய தருமத்தைப் பேச விட்டான் அவன்.

‘நான் முகமறியாத என் உடன் பிறவாத அக்காள் பேரிலே ஆணை வச்சுச் சொல்றேன்; அப் படியே நடப்பேன்!”

உத்தாரம் மொழிந்தவள் அல்லவா தில்லை நாயகி? ஏழை வீட்டுத் திருமகள்.

பாபு என்றால் அவளுக்குக்கொள்ளை கொள்ளை யான பாசம் ஆயிற்றே!

அதற்குள் ஒரு வருஷம்-பன்னிரண்டு மாதங்களா பூஞ்சிட்டாகப் பறந்தோடி விட்டிருக்கின்றன.

“பார்வதி;. பாபு 1. தில்லை நாயகி 1. சுடுநீர் மணிகள் சுட்டன; ஒலித்தன.

அண்ணாச்சி!’

போஸ் ஐந்தரைப் பெட்டி முறுக்கு பாக்கெட் ஒன்றினை அவனிடம் சமர்ப்பித்தாள். மெய் சிலிர்த்தது. பனிவாடை கூடுதல் தான். மாதச் சம்பளம் போக. வெளியூர் வியாபாரத்துக்குச் செல்லும்போது கிடைக்கின்றபடி, ரூபாய் மூன்றில் படிக்குப் பாதி காலி-ஆகட்டுமே!

வரும் விதி இராத் தங்காது என் பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/158&oldid=1377982" இலிருந்து மீள்விக்கப்பட்டது