பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மக்கள் உரிமைகளை மீட்ட
மாதரசி சிறை புகுந்தார்!

ல்லறத்தில் பிரம்மச்சாரிய விரதம் மேற்கொண்ட காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் சட்ட மறுப்பு அறப்போர் இயக்கம் துவக்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தார்.

இந்த சத்தியாக்கிரகப் போரிலே பெண்கள் அணியை ஈடுபடுத்துவது என்று முடிவு செய்த அவர், அதற்குத் தேர்ந்தெடுக்க வேண்டிய மகளிர்கள் எப்படியெப்படி அறப்போரைச் செய்ய வேண்டும் என்பதை விளக்கினார்.

இந்த மகளிர் அணிக்கு தனது மனைவி கஸ்தூரிபாய் தலைமை ஏற்று அறப்போர் ஆற்றுவார் என்பதைக் கூடியிருந்த பெண்மணிகளிடம் கூறினார்.

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து அறப்போர் புரிவதால் பெண்களை இந்த ஆட்சி கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதைகளையும் கொடுமைகளையும் செய்யக்கூடும். அதற்கெல்லாம் அஞ்சக்கூடாது என்றார்.

சத்தியாக்கிரகம் செய்து சிறைத்தண்டனை கிடைத்து நீதிமன்றத்தின் முன்பு பெண்களை நிறுத்தவேண்டிய நிலை வந்தால், நீதிபதி உங்களை விசாரணை செய்யும்போது, தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் உரிமைகளைப் பெறுவதற்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம்