பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

அன்னை கஸ்தூரிபாயின்


என்றும், இந்த ஆட்சியிலே இந்தியர்களை இழிவுபடுத்தும் நிறவெறியை எதிர்த்தே இந்த அறப்போராட்டத்தை நடத்தினோம் என்றும், ஆங்கிலேயர் ஆட்சியின் நிறவெறிச் சட்டங்களை எதிர்த்தே போராட்டம் புரிகிறோம் என்றும், அந்தக் கொடுமையான சட்டங்களை இந்த ஆட்சி திரும்பப் பெறும்வரை பெண்களாகிய நாங்கள் ஓயாமல் சத்தியாக் கிரகத்தைச் செய்து கொண்டே இருப்போம் என்றும் நீதிபதி விசாரணையின்போது கூறவேண்டும் என்பதனைப் போராட்டத்திற்குப் போகும் பெண்களிடம் காந்தியடிகள் விளக்கினார்.

போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட பெண்களுக்குச் சிறைத் தண்டனை கிடைத்தால் அதை மகிழ்ச்சியோடு அனுபவிக்க வேண்டுமே தவிர, தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னால் எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறையிலே இருந்து வெளியே வரக்கூடாது என்பதை அந்தப் போராட்டப் பெண்களுக்கு வலியுறுத்திக் கூறி, அதற்குச் சம்மதம் உள்ள பெண்கள் மட்டுமே, இந்த அறப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் காந்தியடிகள் வலியுறுத்திக் குறிப்பிட்டு வீரஉரை ஆற்றினார்.

அப்போது கஸ்தூரிபாய் பேசும்போது, ”இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களாகிய நாங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜெயிலில் அனுபவிக்கும் துன்பங்களுக்குப் பயந்து, மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வெளியே வரமாட்டோம். இந்தியத் திருநாட்டின் பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தை உருவாக்க மாட்டோம். இது எங்கள் தாய் நாட்டின் மீது ஆணை” நாங்கள் அணிந்திருக்கும் திருமாங்கல்யம் மீது ஆணை என்று கோபாவேசமாகக் குறிப்பிட்டார்.