இட்டிலி வைத்தான்: இது மகேஷ-க்கு! எந்நேரத்துக்கு வத்தாலும், அவருக்காவே காத்திருக்கும்!-அடுத்த தட்டை நகர்த்தினாள்: அது அவளுடையது; அதில் மூன்றே மூன்றைப் போட்டாள்: அத்தானுக்குரிய பிளேட்டில் ஒரேயொரு இட்டிலியை வைத்து, ‘இந்தாங்க,’ என்று கொடுத்தாள்.
“ஆடடே, எனக்கா? என் இணக்குத்தான் எப்பவோ தீர்ந்தாச்சே?" என்று மனைவியிடம் இடைமறித்தார் ரஞ்சித்.
“கணக்குத் தீர்த்தா என்னாங்க? என்னுடையதிலே ஒண்ணைக் கொடுக்கிறேன். பரவாயில்வீங்க. அத்தான்; இத்தாங்க! கணக்கிண்ணா, ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் சகஜத்தானே?”
"ஓ! அப்படியா? வித் ப்ளஷர்!...” என்று விஷமப்புன்னகை ஒன்றைத் துவி விட்டு, மனேவி கை கடுக்க நீட்டிக் கொண்டேயிருந்த தட்டைக் கை தோகாமல் வாங்கிக் கொண்டாரி பாங்கர். பிறகு, ரஞ்சனியின் காதோடு காதாக ‘என்ளுேட கணக்கு பதினைஞ்சு இட்லி ஆயிடுச்சு; அம் காடியோ!’ என்று கிசுகிசுத்தார்.
"சரி, சரி; இட்லியைத் தின்னுங்க!’' என்று பச்சைக் கொடி காட்டினாள் ரஞ்சனி.
"நாங்களும் சாப்பிடலாமில்லையா?"
‘ஓ!’ என்று உத்தரவு கொடுத்தாள், ஆதற்கான உரிமையும் உறவும் பெற்றவள்.
“நீயும் சாப்பிடம்மா.” என்று பாபு சொல்வி, இட்டிலியைப் பிட்டுத் தக்காளிச் சட்டினியில் தொட்டு வாயில் போட்டுக் கொள்ள முனைந்த நேரத்தில், புதிய வெள்ளித் தட்டு பாபுவின் கழுகுக் கண்களிலே பட்டுவிடவே ‘அந்தப் புதுப் பிளேட் யாருக்காம், அம்மா?’ என்று: விசாரித்தான்.
65