உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முதுமைத் துளிகள்

பூனாவிலே உள்ள ஆகாகான் அரண்மனையுள் காந்தியடிகள் சிறைவைக்கப்பட்டிருந்த போது! 'வெள்ளையனே வெளியேறு' போராட்டப் பொதுக் கூட்டத்திலே கஸ்தூரி பாய் பேசப் போகிறார் என்பதற்காக அவரை ஆங்கிலேயர் அரசு கைது செய்தது.

சிறை வைக்கப்பட்ட அறையிலுள்ள அவரது படுக்கைக் கட்டிலின் அருகில் 'ஹேராம்' படம் தொங்கவிடப்பட்டிருந்தது. உடல் நலம் குன்றி மாரடைப்பு நிமோனியா காய்ச்சல் என்று இப்படி பல நோய்களின் துன்பங்களால் அவதிப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார் கஸ்தூரி பாய்.

அவருக்குத் துணையாக இருந்த சுசிலா நய்யாரும் கைது செய்யப்பட்டதால், அவரும் பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தார்!

1944-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் நாள் விடிந்தது. இரவெல்லாம் அன்னையுடன் கால்தூக்கம், அரைத் தூக்கம் என்று விழித்துக் கொண்டு இருந்த சுசிலா அன்னை முனகல் ஒலியைக் கேட்டு எழுந்தார்! உடனே 'சுசீலா என்னை வீட்டுக்கு அழைத்துப் போ' என்றார் கஸ்தூரிபாய்.

"அம்மா, நாம் இப்போது நமது வீட்டில் தானே இருக்கிறோம்; அதோ பாருங்கள் நீங்கள் வழக்கமாகத் தூங்கும் கட்டில். எதிரே 'ஹேராம் படம் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதுதானே உங்களுக்குரிய விருப்பமான