பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

அன்னை கஸ்தூரிபாயின்


படம்" என்று சுசீலா நேரத்துக்கேற்றவாறு கூறி, கவனத்தைத் திசை திருப்பினார்.

சிறிது நேரம் கழித்து சுசீலாவை அழைத்து தன்னை வீட்டிலுள்ள பாபுவின் அறைக்கு அழைத்துச் செல்லுமாறு வேண்டினார் கஸ்தூரிபாய்.

"நீங்கள் 'பாபு' அறையில் தானே இருக்கிறீர்கள் அம்மா" என்றார் சுசீலா ஒருவேளை தனது கணவரான காந்தியடிகளைப் பார்க்க விரும்புகிறாரோ என்னவோ என்று எண்ணிய அவர் பக்கத்து அறையிலே சிற்றுண்டி உண்டு கொண்டிருக்கும் காந்தியடிகளுக்கு ஆள் அனுப்பி, வருமாறு கூறினார்!

சுசீலாவின் மடியிலே சாய்ந்து கொண்டிருந்த கஸ்தூரி பாய், திடீரென்று, 'சுசீலா, எங்கே போவோம்? இறந்து விடுவோமா? என்றார்.

கஸ்தூரி பாய் உடல் நலம் சாதாரணமாகக் குன்றி இருந்த போதெல்லாம் இதே சொற்களைப் பலமுறை கூறி இருக்கிறார் அவர்.

அப்போதெல்லாம் சுசீலா அதற்குப் பதில் சொல்லும் போது "ஏனம்மா இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் கற்பனையாகக் கூட இப்படியெல்லாம் சொற்கள் உங்களது வாயிலே இருந்து வரக் கூடாதம்மா! நாம் எங்கே போகிறோம், நாம் எல்லோரும் வீட்டுக்குத்தான் திரும்புவோம்' என்று கூறுவதும், தேற்றுவதும் முன்புள்ள வழக்கமாகும்.

ஆனால், 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் நாளன்று சுசிலாவுக்கு அப்படிச் சொல்லத் துணிவு வரவில்லை. அதனால் அவர் அன்று கூறியது என்ன தெரியுமா?