பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்படைச்சிடப் போறேன்; பிரசினைன்ன, அதை அப்பவே தீர்த்துக் கட்டிப்புடவேணும்; இல்லாட்டி, எனக்கு மண்டை வெடிச்சிடும்! அப்படியே, நம்ப பங்களாவை என் சிநேகிதனுக்குச் சுற்றிக் காண்பிச்சிட்டு, நொடியிலே திரும்பிட்றேன்: சாத்திரிக்கு மகேஷ் ரதி ஜோடிக்கு வைக்கிற விருந்திலே, என்னோட அசோகனும் கலந்துக்கிடுவாளுக்கும் பாபு அங்கிருந்து பாய்ந்தோட எண்ணினான்: எட்டிநின்ற சிநேகிதனை எட்டியே நிற்கச் சோன்னான், பாதங்களே நகர்த்தியிருப்பான்.

அதற்குள்:

அங்கேயே வந்துவிட்டார் மகேஷ், தனியாக, அதாவது, ரதித் துணை இல்லாமல், தனியாக வந்திருந்தார். வந்வவர், பாபு நீட்டிய கடிதங்கள் இரண்டையும் கை நடுங்க வாங்கிக்கொண்டார்: வாசித்தார்; கார்கால நீர் மேகம் அவர் முகத்தில் கூடாரம் போடுகிறது:’ கொஞ்சம் வெளியே போயிட்டு வந்திடுறேனுங்க, என்று சொல்லிவிட்டு, மரணதண்டனைக் கைதியின் குலை நடுக்கத்துடன் அங்கிருந்து பிரிந்தார்.

ரதிதேவி உள்ளே நந்தினிதேவியோடு படம் பார்த்துக் கொண்டிருக்கலாம்! பொய் அல்ல!-நாளை நமதே!

மேலே: நிலா!

அந்தி நிலாவா?

கீழே: ரஞ்சித்-ரஞ்சனி தம்பதி!

அதோ, சூன்யம் அவ்விருவரையும் பார்த்துச் சிரிக்கிறது; கைகொட்டிச் சிரிக்கிறது: விதியாகச் சிரிக்கிறது: ஏன், வினையாகவும் சிரிக்கிறது!

ஏன்?...

197