உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

இலங்கைக் காட்சிகள்

குக் கோடியில் வள்ளியம்மையின் ஆலயம். கதிர்காமம் மக்கள் வாழும் ஊர் அன்று. முருகன் திருக்கோயிலுக்காகவே அமைந்த சிறிய ஊர். அங்கே நிரந்தரமாக வாழ்பவர்கள் யாரும் இல்லை. யாத்திரிகர்களுக்கு வேண்டிய பண்டங்களை விற்று வியாபாரம் செய்யும் சில கடைகள் இருக்கின்றன. உற்சவ காலங்களில் பக்தர்கள் தங்குவதற்குப் பல மடங்களும் சத்திரங்களும் இருக்கின்றன.[1]

சந்நிதி வீதிதான் பெரிய வீதி. வேறு ஒன்றிரண்டு சிறிய தெருக்கள் இருக்கின்றன. உற்சவ காலத்தில் தான் இங்கே மனித நடமாட்டம் இருக்கும். காட்டாற்றில் வெள்ளம் வருவது போல அக்காலத்தில் மனித வெள்ளம் கரை கடந்து வருமாம். ஆளுக்கொரு கற்பூரச் சட்டியைத் தலையில் வைத்துக் கொண்டு வருவார்களாம். கோயிலுக்கு உள்ளும் புறமும் இந்தக் கற்பூரத் தீபமே இரவில் இருளை ஓட்டிவிடுமாம்.

ஆலயத்தை நோக்கிச் சென்றோம். ஆலயத்தின் முகப்பில் ஒரு வளைவு இருக்கிறது. சில காலத்துக்கு முன் அமைத்ததாக இருக்கவேண்டும். உள்ளே புகுந்தோம். சிறிது தூரம் திறந்த வெளி இருக்கிறது. அப்பால் திருக்கோயில் இருக்கிறது.

கோயிலா அது? மனசிலே பக்தியில்லாதவர்களுக்கு, அதுவும் தமிழ்நாட்டுக் கோயில்களைத் தரிசித்தவர்களுக்கு, அது கோயிலாகவே தோன்றாது. ஓட்டுவில்லைக் கூரைவேய்ந்த சாவடி போலத் தோன்றுகிறது. ஆனால் அந்தக் கூரையின் மேல் மூன்று


  1. இப்போது ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த கிளை ஒன்றை மிக வசதியாக இங்கே கட்டியிருக்கிறர்கள்.