பக்கம்:குறள் நானூறு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகக் கனிந்து அழிந்த பழம் சுவையற்றது. அது போன்று பெரும் பிணக்காம் துணி இல்லாத காமம் நின்ற இன்பமற்றதாகும். முற்ருது கருப்பிடித்த அளவேயுள்ள இளங்காயும் சுவை பிடிக்காதது. அது போன்று, சிறு பிணக்காம் புலவி இல்லாத காமம் இன்பக் குறை உடையதாகும். எனவே, துணியும் புலவியும் காமத்திற்குச் சுவை ஊட்டுபவை. 391

நிழலேச் சார்ந்துள்ள நீரே இனிமை தருவது. வெய்யிலைச் சார்ந்துள்ள நீர் இனிமை அன்று. அது

போன்று, ஆழ்ந்த காதல் கொண்டவரிடம் ஊடல் கொள்ளுதலே இன்பந்தருவது, அது இல்லாதவரிடம் ஊடுவது இன்பம் அன்று. 392

யாம் ஊடல் கொண்டு பேசாதிருந்தோம். தும்மினல் நீடு வாழ்க’ என்று வாழ்த்துதல் மரபு அன்ருே அதனே அறிந்த அவர் தும்மிஞர். யானும் வாழ்த்தினேன். இவ்வாறு சூழ்ச்சியாக என்னைப் பேசவைத்து ஊடலைத் தீர்த்ததை என்னென்பேன்! 394

அவளைப் பேசவைத்து ஊடல் போக்க வலிந்து தும்மினேன். உடன் வாழ்த்திப் பேசினுள். வலிந்த தும்மலே அறிந்து மேலே பேசாதிருந்தாள். மேலும். பேசவைக்க அடுத்து வலிந்து தும்மினேன். உடன் வாழ்த்தை மாற்றி அழுதாள். 'தும்மல் பிரிந்தவரை நினைப்பதன் குறிப்போ? எவரை நிக்னத்துத் தும்மினிர்" என்று அழுதவாறே வினவிள்ை? . .395

162

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/174&oldid=555671" இலிருந்து மீள்விக்கப்பட்டது