பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

இலக்கியத்தில் உண்டிந்தச் சொல்லோட்டம்;

இலங்குமதில் உணர்வார்ந்த பொருளூட்டம்;

- இருக்குமதில் சுவையோட்டம்.

432 பரிபாடல்" தனில்உண்டு குதுகுதுப்பு;

பெரியபுரா ண"த்தும் உண்டு குதுகுதுப்பு;

- பரிவு' என்றே பொருளதற்கு. பரிபாடல்" காட்டும்.ஒரு பதைபதைப்பு;

பற்றும் அதன் பொருளாகும் மெலிமெலிப்பு:

- படிப்போர்க்கும் ஒருசுவைப்பு.

433 திருவாச க”த்தில்ஒரு விதுவிதுப்பு:

திகழ்நால டியார்’’சொல் கலகலப்பு;

- தேர்பொருளோ ஒலிஒலிப்பு. தரும் நீதி வெண்பா'வில் சிலுசிலுப்பு;

தக்க நீதி நெறி'யில்ஒரு பரபரப்பு;

- தரும்.விரைவுப் பொருளிருப்பு. சீவகசிந் தாமணி'யில் வழுவழுப்பு; 434

சோர்வாக நழுவவிடும் மழுமழுப்பு;

- சேரும் அங்கு பொருளமைப்பு.

235