இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
vii
இந்நூலை மனமுவந்து ஏற்று வெளியிட்ட திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினருக்கும்: நூலைச் செவ்விய முறையில் அச்சிட்டுக் கற்போர் கரங்களில் கவினுறத் தவழச் செய்த அப்பர் அச்சகத்தினருக்கும் என் நன்றி உரித்தாகுக.
தமிழ் நாட்டு எண்ணற்ற ஏழைச் சிறுவர்களின் எதிர் காலத்தை எண்ணத்தில் கொண்டு பணியாற்றும் எழை பங்காளர் தலைமையமைச்சர் திரு. கே. காமராசர் அவர்கட்கு படைக்கப்பெற்று, அவர்களின் அறுபதாவது ஆண்டு நிறைவின் நினைவு மலராக இந்நூல் வெளிவருகின்றது.
என்னையும் ஒரு கருவியாகக்கொண்டு இச்சிறு நூல் வெளியிடத் தோன்றாத் துணையாக நின்று இயக்கிய எல்லாம் வல்ல இறையருளை நினைந்து போற்றுகின்றேன் ; அவன் திருவடி மலர்களை வணங்கி வாழ்த்துகின்றேன்.
திருப்பதி
1-11-1962
ந. சுப்பு ரெட்டியார்