உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

81


அயல்நாட்டார். அவர் எவராலும்-எவ்வித லாபமும் இல்லாமல், மக்கள் தொண்டே இறைவன் தொண்டென பணியாற்றி மறைந்த மேதைகளாகத் திகழ்வது ஒரு பெரும் வியப்பாக உள்ளது.

அன்னி பெசண்ட் மதத்தை எதிர்த்தார். தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ், வால்டேர், ரூசோ போன்றவர் களைப் போல!

அன்னிபெசண்ட் நிற பேதங்களை விரோதமாகக் கருதவில்லை; எல்லோரும் மனிதர்களே என்று எழுதினார்- பேசினார்!

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனார் உலகச் சமுதாய உருவாக்கத் தத்துவத்தின்படி இத்தியாவிலே வாழ்ந்து காட்டியவர்.

உலக மக்கள் எல்லோரும் எல்லா நலனும் பெற்று வளமாக வாழவேண்டும் என்ற பரந்த நோக்குடையவர் ஆன்னிபெசன்ட்;

அன்னிபெசண்ட் பழகுவதிலே இனிமையாளர்: எல்லாரையும் தேசிக்கும் பண்பாளர்! -

பிறர்மணம் புண்படும்படியாக, அவர் யாரையும் பேசமாட்டார்.

"வாழ்க வசவாளர்" என்ற தத்துவத்திற்கு இலக்கணமாக வாழ்த்தவர் அன்னி பெசண்ட்.

வாழ்க்கையில் உதவி என்று வந்தவர்களை தன்னிடம் இல்லாமற் போனாலும், இயன்றதைச் செய்துவிட்டு, மற்றவரைப் பார்க்க வழிகாட்டிவிடும் பண்புடையவர்!