பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

53


அடுத்த நிகழ்ச்சியாக, அன்னிபெசண்ட் இந்திய சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள, 1893-ம் ஆண்டு நவம்பர்மாதம் 16-ம்தேதி புறப்பட்டார். லண்டன் மாநகரச் சான்றோர்கள் கல்வியாளர்கள், அறிஞர்கள், தத்தலைவர்கள். அனைவரும் அவரைப் பாராட்டி, வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.

இந்தியாவின் தொன்மை, சிறப்பு, ஆன்மீகம், நாகரீகம், பண்பாடு, வரலாற்றுப் புகழ் அனைத்தைப்பற்றியும் அன்னி பெசண்ட் புத்தகங்கள் மூலமாகப் படித்து தெரிந்திருந்தார்.

இந்தியாவை மிகவும் நேசித்த அயல்நாட்டவர்களில் அன்னிபெசண்ட்டும் ஒருவர்! அதனால்தான், அவர் இந்தியாவை புனிதபூமி என்று அழைத்துப் பெருமைபட்டார்.

இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி எவ்வாறு நடக்கின்றது என்பதை அவர் கூர்ந்து கவனித்தார். அக்ரமம், அடக்குமுறை, ஆணவப்போக்கு, மக்களது உரிமைகள் பறிப்பு காட்டுத் துர்பார் போன்ற துப்பாக்கிச் சூடுகள் நடந்ததை அறிந்து கோபாவேசம் கொண்டார்.

"இங்கிலாந்து'.இந்தியா - ஆப்கனிஸ்தானம்" என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதினார் அந்தப் புத்தகத்தில், மேற்கண்ட உண்மைகள் பலவற்றை மறைக்காமல் எடுத்துரைத்தார். -

இந்தியா மீது இவ்வளவு பற்றும். மனிதாபிமான உணர்வும் கொண்ட ஒரு வீராங்கனை, இந்தியா வருவதை அறிந்த இந்தியத் தலைவர்கள், மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி கொண்டார்கள்.

இந்தியாவிற்கு வந்த அன்னிபெசண்ட் முதன் முதலாக, தமிழக மன்னிலே உள்ள தூத்துக்குடி நகரிலே வந்து இறங்கினார். அந்நகரில் சிறந்த ஒரு சொற்பொழிலை ஆற்றினார்,