உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னை தெரேசா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 வென்றும், தன்னுடைய உலக வாழ்க்கை தனித்த முறையில் ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டிய தென்றும் அவள் முடிந்த முடிவாகத் தீர்மானம் செய் தாள். இப்படிப்பட்ட மனப் புரட்சியின் விளைவாக, அவள் அன்பிற்குத் தூது செல்லவல்ல மக்கள் நலச் சேவகியாக ஆகவும் விரும்பினள். பிறந்த மண்ணையும், வாழ்ந்த மனேயையும் துறந்து, கிறித்தவக் கன்னிகை ஆகி, தன் வாழ்வை உலக மக்களுக்குப் பயனுடைய காணிக்கையாக ஆக்கும், பொதுநலத் தொண்டு செய்ய வேண்டுமென்றும் அக்னெஸ் முடிவெடுத்தாள். - முடிவு வெற்றி பெற்றது. பெற்ருேர்களிடம் விடை பெற்ருள் கன்னி அக்னெஸ். அக்னெஸ் இப்போது மதிப்பிற்குரிய புனிதக் கன்னி ஆனா!... - -. ஆமாம். மரியாதைக்குகந்த கன்னித் துறவி ஆர்ை அக்னெஸ். ஆண்டு 1928. அயர்லாந்து நாட்டிலே டப்ளின் நகரில் செயலாற்றி வந்த லொரேட்டோ கன்னிமார் மடத்துக் குழுவில் (Congregation of Loreto nuns) g)&oríg Q&uusjulமுன்வந்தார் அக்னெஸ்; அங்கே சுமார் ஓராண்டுப் பயிற்சிப் பெற்ருர்; ஆங்கிலமும் கற்றுக் கொண்டார். பின்னர்1929 பிறந்தது. இந்த ஆண்டு, உலக வரலாற்றுப் புத்தகத்தின் தாள் களிலே தனிச் சிறப்பு வாய்ந்ததோர் ஆண்டாகவே மதிக்கப்பட வேண்டும். காரணம்: உலக மக்களுக்கு அன்பின் தத்துவத்தை எடுத்துக் காட்டிய இயேசுவைப்பக்தியோடு நேசித்த கன்னி ஒருத்தி, கன்னித் துறவியாகி-தான் பிறந்த யூகோஸ்லாவியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/39&oldid=736349" இலிருந்து மீள்விக்கப்பட்டது