பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


எதிர்த்தவரல்லார்! மாறாக, அண்ணலின் தன்னலமற்ற தியாக வாழ்வைப் போற்றிப் பாராட்டியவர் கவிஞர் பெருமகன்.

மகாத்மா காந்தியடிகள், இராட்டைச் சக்கரத்தில் நூல் நூற்றுக் கதர் துணிகளை அணிய வேண்டும் என்றார். அதை ஓர் இயக்கமாகவே அவர் நடத்தி வந்தார்.

கவிஞர் தாகூர் காந்தியடிகளின் இராட்டைப் பொருளாதாரத்தை, லட்சியத்தை வெறுத்தார்; குறைகளைக் கூறினார். தனது கருத்தை ஆதரித்து தாகூர் கட்டுரைகளை எழுதினார். கையால் நூல் நூற்று ஒரு நாட்டுக்கு சுதந்திரம் வாங்க முடியுமா? என்று வங்க அறிஞர் சரத் சந்திர போஸைப் போலக் கேட்டார். எச்சில் துப்பினால் ஏரி நிரம்பிவிடுமா? என்றெல்லாம் தனது கட்டுரைகள் மூலமாகக் காந்தியடிகளைக் கேட்டார். அவரது கொள்கைகளைத்தான் தாகூர் விமரிசனம் செய்தாரே தவிர, காந்தியடிகளைத் தனிப்பட்ட முறையில் தாகூர் வெறுக்கவில்லை.

காந்தி பெருமானுடைய தூய வாழ்க்கையையும், அற நெறியையும் தாகூர் பெருமகன் மதிப்புக் கொடுத்துப் பாராட்டிப் போற்றி வந்தார் என்பதற்கு காந்தி அடிகள் சாந்திநிகேதன் வந்த போது ‘மகாத்மா’ என்ற பட்டம் சூட்டி உலகறியப் புகழ்ந்தவரே கவிஞர் தாகூர்தான் என்றால், அவர் அண்ணல் மீது எத்தகைய அளப்பரிய அன்பை வைத்திருந்தார் என்பதை எண்ணிப் பார்த்து தான் அதன் உண்மையை உணர முடியும்.

காந்தியடிகள் தாகூர் நடத்தி வந்த சாந்திநிகேதன் கலைக் கோட்டத்திற்கு வருகை தந்த போது, தாகூர் பெருமகன் தானே கதராடைகளை அணிந்து கொண்டு மகாத்மாவை எதிர் நோக்கி