உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


யில் ஓடி யொளித்த பேய் முதற் குலோத்துங்கன் காலத்தில் தேவியின் முன் வந்து கண்டோர் வியப்புறுமாறு இந்திரசால வித்தைகளைக் காட்டுகின்றது. போர்க்கத்திலுள்ள காட்சிகள் 'தத்ரூபமாக'க் காளிக்குக் காட்டப் பெறுகின்றன. முதுபேய்,

துதி வீழ்துரக ராசியார்! உடல்து
     ணிந்து வீழ்குறைது டிப்பபார் !
அஞ்சி யோடுமத யானைபார்!
     உதிர ஆறும் ஓடுவன நூறுபார்![1]

[துஞ்சல்-இறத்தல்; துரகம் குதிரை]

என்று தன் மாய வித்தையால் போரில் இறந்துபட்ட குதிரைகளையும், வெட்டுண்டு துடிக்கும் வீரர் உடல்களையும் வெருவியோடும் யானைகளையும் பெருகியோடும் உதிர வெள்ளத்தையும் காட்டுகின்றது. இத்தகைய சாலவித்தைகளில் மயங்கின பேய்கள் பிணங்களைப் புசிக்கும் ஆவலால் ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்து அடித்துக்கொண்டு ஓடத் தொடங்குகின்றன. மாயப்போரில் கண்ட பிணங்களின் குருதியையும் தசையையும் விரும்பி வெறுங்கை முகந்து நிலத்தைத் துழாவலாயின. முதுபேய் தேவியை நோக்கி,

கொற்றவர்கோன் வாளப்யன் அறிய வாழும்
     குவலயத்தோர் கலையனைத்தும் கூறஆங்கே
கற்றுவந்தார் கற்றவவன் காணு மாபோல்
     கடைபோகக் கண்டருள்என் கல்வி என்றே[2]

[கொற்றவர் கோன்- அரசர்க்கரசன்; குவலயம் -உலகம்;

கடைபோக-முடிய.]


  1. தாழிசை-165.
  2. தாழிசை -174