பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணு ஒரு

தென்றல்!

தமிழெனும் கன்னிப் பெண் தோன்றிய பொதிகையில் பிற்ந்த தென்றலே! அ றி வெ னு ம் மணத்தை தமிழ் அவனியிலே கமழவைக்க மழலை ந.ை போட்டு வரும் வசந்தனே!

பொருப்பை விட்டெழுந்து பொறுப்போடு விருப்பு வெறுப் பற்று நீ தமிழகத்தில் உலா வருகிருய்!

உனக்கிருக்கும் கடமை உள்ளம் அரசக் கட்டிலிலே ஆரோகணித் திருப்போருக்கு இல்லையே என்று நகை புரிகிருயா? செய்! செய்:

மலர்த் தோழா! நீ வந்து விட்டாய் என்பதை தாமரை பூத்து கண்ணழகு பெறும் தடாகங்கள் மூலம் நான் நோக்கு கிறேன்!

மணம் நிறைந்த காற்ருகஇளம் வேனிலாக நீ சில்லென்று என்னை விசிறி விடுகிருய்!

மனதை மயக்கும் மாலைப் பொழுது உன்னைக் கண்டு மகிழ் வுறுவதைப் பார்க்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/108&oldid=564552" இலிருந்து மீள்விக்கப்பட்டது