பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

முயல்கிறான்--- இப்படி மனம்போனவா றெல்லாம் கற்பித்த்துப் பேசினர் அவ்வூர் அளப்பர்கள்.

ஒருநாள் ஒருவன் அமுத்தலாகச் சொன்னான்; 'குட்டி களை இழுத்து வந்து ஜல்ஸாப் பண்ணி மகிழ்கிற ஆசாமி எவனோதான் அந்த பங்களாவிற்கு வந்திருக்கிறான்' என்று.

'ஆங், அப்படியா! 'என்னண்ணேய் விஷயம்?' 'சட்டுப் புட்டுன்னு விஷயத்தைச் சொல்லுமய்யா!' என்று உற்சாகக் குரல்கள் கூவின.

நேத்து ராத்திரி பதினோரு மணியிருக்கும். எனக்கு வயிற்றைக் கலக்குற மாதிரியிருந்தது. ஆற்றுப் பக்கமாப் போயிட்டு வரலாமேன்னு போனேன். நான் வழக்கமாக அந்த ஊாடிப் பாலத்துக்கிட்டே ஒத்தையடித் தடம் இறங்குதே, அந்த வழியாகத்தான் போறது. போயிட்டுத் திரும்ப வந்த ரோட்டிலே ஏறக் காலத் தூக்கினேன். கண்ணைக் குருடாக்குற மாதிரி வெளிச்சமடிச்சுது. மோட்டக்காரு லயிட்டு வெளிச்சம் காரிலே யாரு வாறா பார்க்கலாமேன்னு நின்னு கவனிச்சேன். பாலத்தைத் தாண்டித் தானே பங்களாத் தோப்புக்குள்ளே போகனும்.காரு எங்கேதான் போகுமின்னு எனக்கு ஒரு எண்ணம். நின்னு கவனிச்சேன். கார் வந்தது. ரொம்ப வேகமா வரல. விளக்குகளை அணைக்கவுமில்லை. நிதானமாத்தான் வந்தது. உள்ளே மங்களான வெளிச்சமிருந்தது. காரை ஓட்டினவன் தவிர ஒரு ஆம்பிளையும் பொம்பிளையும் இருந்தாங்க, அவ ஷோக்கான உருப்படி. அடடா, பிக்சர்ன பிக்சர்தான். மணியான குட்டி!...

எல்லோரும் ஒருவர் மூஞ்சியை ஒருவன் பார்த்துக் கொண்டனர். அவர்கள் கண்களில் பொறாமை சிற்றொளி சிதறி விட்டுப் பம்மியது. அவர்கள் ஆர்வம் எவ்வியது. 'ஆங், அந்த ஆசாமி எப்படியிருந்தான்?' பலரும் அறிய அளாவியது. இதே தான்.