பக்கம்:இருட்டு ராஜா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்7



கோட்டைக் கொத்தளம் மீதிலேறி
கூசாமல் குதிப்பேன்—ஏ பலபா
கூசாமல் குதிப்பேன்
காவலர் பிடிக்க வந்தால்
கத்தியால் குத்துவேன்—ஐஸா
கத்தியால் குத்துவேன்!
கொற்றவர் கண்டுபிடிக்க வந்தால்
குருவி போல் பறப்பேன்—பலபா
குருவி போல் பறப்பேன்!
ஒரு நீச்சலில் கப்பலைப் பிடிப்பேன்
கல்கத்தா துறைமுகம் பார்ப்பேன்!

சொற்களைத் தொண்டையில் போட்டு உருட்டிப் புரட்டி காட்டுத்தனமாகப் பாட்டென்று முத்துமாலை கத்தித் திரிகிறபோது அரைகுறைத் தூக்கத்தில் கண்களை மூடிக்கிடந்தவர்கள் திடுக்கிட்டு விழித்துக் கொள்வார்கள்.

“சண்டாளப் பய. இவனோட நித்தம் நித்தம் இதே எழவாப் போச்சு” என்று எரிச்சலோடு முணுமுணுப்பார்கள். வீட்டுக்குள்தான். - -

முத்துமாலையின் முகத்துக்கு நேரே எதுவும் சொல்ல அந்த ஊர்க்காரர்களில் எவருக்கும் தைரியம் கிடையாது.

“சரியான பிசாசுப்பய: ஒண்னு கிடக்க ஒண்ணு செய்து போடுவான்” என்ற நினைப்பு எல்லோருக்குமே.

ஊரையும் ஊராரையும்பற்றி அவனுக்கும் உயர்வான அபிப்பிராயம் கிடையாது தான்.

முன் காலத்திலே, விளக்குகள் எல்லாம் சர்வ சாதாரணமா இல்லாத நாட்களிலே ஒரு பழக்கம் இருந்துதாம். அதை ஒரு பழமொழி சொல்லுது, மலைவாயிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/9&oldid=1138651" இலிருந்து மீள்விக்கப்பட்டது