பக்கம்:இருட்டு ராஜா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80இருட்டு ராஜா

 பணத்தையும் சுட்ட மண்ணாச்கியாச்சு,இல்லையா? அதை வச்சுக்கிட்டு ஊரை விட்டு வெளியேறி, ஊத்துக்குடி, மதுரை, இதுமாதிரி எங்கேயாவது போயி, ஒரு கடை வச்சிருக்கலாமில்லா? பணம் சேர்ந்திருக்கும். அதை விட்டுப் போட்டு பணத்தையும் பாழாக்கி, உடம்பையும் கெடுத்து, கெட்ட பேரும் வாங்கிக்கிட்டு இதெல்லாம் என்னத்துக்கு?”

அவள் அனுபவப்பட்ட பெரியமனுஷி தோரணையில் பேசினான்.

முத்துமாலை பெருமூச்செறிந்தான். “யாராரு எப்படி எப்படி வாழனுமின்னு ஏற்பட்டிருக்கோ, அப்படி தான் ஒவ்வொருத்தன் வாழ்கையும் அமையும். நான் பெரிசா திட்டம் போட்டுகிட்டு பணத்தோடு பட்டணம் போயிருந்தாலும் பாழாகணும்னு இருந்தால், இருக்கிற பணம் பாழாகித்தான் போகும். நான் இப்படி இருக்கேனே என்றதுக்காக நான் என்னைக்குமே வருத்தப் பட்டதில்லை. இனிமேலா வருத்தப்படப் போறேன்? நீ ஊரைவிட்டுப் போனதினாலே பணமும் பவிசுமா, சீரும் சிறப்புமா இருக்கிறதாத் தெரியுது. சந்தோஷமா இருக்கணும். அதுதான் முக்கியம். சரி, அவாள் என்ன பிசினசு பண்ணுதாக?” என்றான்.

“என்னென்னவோ பண்ணுறாங்க. அதெல்லாம். எனக்குத் தெரியாது.”

“எப்போ இந்த ஊருக்கு வருவாக?”

“அதுவும் தெரியாது. திடும்னு புறப்பட்டுப் போவாங்க. ரெண்டு மூணு நாள் வரமாட்டாங்க, திடீர்னு வந்துநிப்பாங்க.எங்கே போறேன்னும் சொல்லமாட்டாக, கேட்கவும் கூடாது. அவங்க குணத்தை புரிஞ்சுக்கிட்ட பிறகு நானும் கேட்கறதில்லே. வீட்டோட கிடக்கிற எனக்கு அதெல்லாம் தெரிஞ்சுதான் என்னஆகப்போகுது. கேட்கிறதெல்லாம் வாங்கித் தந்திருவாங்க. பணமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/82&oldid=1139396" இலிருந்து மீள்விக்கப்பட்டது