பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 会委5 வறுமையும் அதனால் வரும் துன்பமும் இன்றி இனிது.கடைபெறு வதற்கும். மறுமையின்பத்தை அவாவி செய்யப் பெறுவதாகி: தவவொழுக்கமும் பிறருதவியை எதிர்பாராமல் செய்வதற்கும் செல்வப் பொருள் இன்றியமையாது வேண்டப் பெறுகின்றது என்பதை காம் அறிவோம். இதனை நன்குணர்ந்த ஆசிரியர் தொல்காப்பியனாரும், மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது பிழையா திாகல் வேண்டியும் இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே.* என்று ஒதியுள்ளார். எனவே, இம்மை மறுமைப் பேறுகளை அடைவித்திற்கு இன்றியமையாக் கருவியாக இருக்கும் இத்தகைய செல்வப் பொருளை ஈட்டும் வகையில் ஆசிரியர் கொண்ட கருத் தினை காம் ஆராய்ந்து காணவேண்டும். கல்வியறிவு வாயாதவர் கள் செல்வத்தை ஒழுங்கான கன்முறையில் ஈட்டும் வகையினை பும் ஈட்டிய பொருளை அங்ங்னமே கன் முறையில் செலவிட்டு இம்மை மறுமை இன்பங்களை எய்தும் வகையினையும் சிறிதும் அறியார். அன்றியும், ஒருகால் ஊழ்வினை வயத்தால் கல்வியறிவு வாயாதவர்கட்குச் செல்வம் வரின், அவர்கட்குத் தலைகால் தெரிவ தில்லை. அதனைப் பயன்படுத்தும் வழியினை அறியாராப், அதனையே தெய்வமெனக்கொண்டு வாழ்த்து இருவகைப்பேறு களைப் பெறாது மாண்டொழிதலையும், அவருக்குப் பின் அப்பொருளைப் பெறுவோர் பல்வேறு தகாத முறைகளில் செல விட்டு அழிதலையும் நாம் நாடோறும் காண்கின்றோம். எனவே, இவ்வுண்மையை கனகுணர்ந்த பண்டைத் தமிழர்கள் பொருளைப் பற்றிப் பேசுங்கால் கல்விப் பொருள் மாட்சியினை முன்கிறுத்தி வலியுறுத்தியும், அதன் பின்னரே செல்லப் பொருளை கிறுத்தியும் பேசா நின்றனர். ஆசிரியர் தொல்காப்பியனாரும் இருவண்கப் பொருள்களைப் பெறும் பொருட்டு இளைஞர்கள் வேறு நாடு கோக்கிச் செல்லும் பிரிவுகளில் நூல் ஒது தற்குப் பிரியும் பிரிவை முன் வைத்தும், பொருள் தேடுவதற்குப் பிரியும் பிரிவை அதன் பின் வைத்தும் அகத்திணை இயலில் பிரிவிலக்கணம் ஒதியுள்ளமை பால் இதனை அறியலாம். இம்முதலாசிரியர் வழி வந்த வள்ளுவப் பெருந்தகையும் பொருட்பாலில் கல்வியை முன்வைத்தும், அதற்குப் , ஆதிகாரங்கள் கடந்து போய்ச் செல்வத்தைப் பின்வைத்தும் கெத்தினை - நூற். 30 (இளம்.! ஒ 45. ஒதல் பகையே தூதிவை பிரிவே'அகத்திணை-நூற். 27)