பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் சில அகத்திணை மரபுகள் - 139 எனவே, களவுக்கூட்டம் குறிஞ்சி நிலத்திற்கு வைக்கப்பெற்றது : புணர்ச்சிக்குச் சிறந்த நிலைக்களன் குறிஞ்சியாயிற்று. இங்குப் பெறும் இன்பம் பன்மடங்கு சிறக்கும் என்பது பண்டையோர் கருத்து. தலைவியுடன் கூடிய தலைவன் பிரிக்து செல்லும் இடம் 3.முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து - கல்லியல் பிழிந்த நிலமேயாதலின் பிரிதல் பாலைக்கு ஆயிற்று. பிரிந்து செல்லும் இடத்தின் இடர்ப்பாடுகளைப் பன்மடங்கு பெருக்கிக் காட்டுவதற்கு ஏற்ற இடம் பாலை நிலமாகும். பிரிவுத்துன்பம் மிகைப்படுத்திக் காட்டப் பெறுவதற்குத் தகுந்த கிலைக்களம் இது. தலைவன் தலைவியைப் பிரிக் து செல்லும் பொழுது உறவினர் அறிந்து தடுத்தால், அவன் அவளை உடன்கொண்டு செல்வான். அவளைத் தன் ஊரில் மணந்து இல்வாழ்க்கை கடத்துவான் இங்ங். னம் பெரும்பாலும் உடன்கொண்டு செல்பவன் காட்டுத்தலைவனே யாவான். இல்வாழ்க்கை கடத்தும் பொழுது தலைவன் பரத்தமை காரணமாகத் தலைவியை விட்டுப் பிரிவான். இப்பொழுது தலைவியிடம் ஊடல் நிகழும், உழைப்பு அதிகமின்றி வளம் மிக்க மருத கிலத்தினுள்ள மக்களிடமே, காதல் மாதர் முலையினொடும் பொழுது போக்கும்'20 பழக்கம் இயல்பாக அமையும். எனவே ஊடல் மருத நிலத்திற்காயிற்று இல்வாழ்க்கைக் காலத்தில் பகை களைதல்பற்றிப் பிரிந்து வினைமுற்றி மீள்வோன் பெரும்பாலும் ஊர் கோக்கி வருங்காலம் காப்பருவமாகிய ஆவணி புரட்டாசி மாதங்களாகும். இக்காலத் தில் வெப்பமும் தட்பமும் கோது ருேம் நிழலும் பெறுதல் எளிது. ஊர்ப்பக்கத்திலும் காடும் சோலையும் காட்சி பெருகும் ; மாவும் புள்ளும் மகிழ்ந்து விளையாடும். மாலையில் பசுக்கள் மன்றில் புகும் ; கோவலர் குழலோசை எங்கும் இனிக்க எழும். இச்சூழ் நிலை காமக்குறிப்பை மிகுவித்துப் பிரிவாற்றிக்கொண்டு தனித் திருக்கும் தலைவியது கற்பு கிலையைப் பெருகக் காட்டும். எனவே, இருத்தல் முல்லைக்காயிற்று. தலைவனைப் பிரிந்த கிழத்திக்குக் கடலும் கழியும் கானலும் கானுக்தோறும் ஆற்றாமையைத் தோற்றுவிக்கும். ஆள் அரவம் இல்லாத கடற்கரையிலிருந்து தனிமையில் நாம் கின்று பார்த்தால் கம்மிடமும் இவ்வாற்றாமை தோன்றக் காணலாம். இச்சூழ்நிலை இரங்கலைப் புலப்படுத்துவதற்கு மிகவும் ஏற்றது. ஆகவே' 20. கலிங் - தாழிசை 277.