பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

23

23 இடி விழுந்ததைப்போல் பிரமித்துப் போனேன் என்றால் மிகையாகாது ! யுத்தம் என்றால் ஒன்றும் அறியாத நான் ராணுவத்தைச் சேர்வது என் தகப்பனாருடைய கத்தியைக் கையால் தொடவும் அஞ்சும் நானா யுத்தம் செய்யப் போவது? என் சிறுவயதில் என் பாட்டனார் ஒருவர் இந்தப் புலி குட்டியின் வயிற்றில் இந்த நரிகுட்டி எப்படி பிறந்தது '_ என்று ஏளனம் செய்வார், இது எனக்கு ஞாபகம் வந்தது சிறிது பொறுத்து என் மனதைத் திடப்படுத்திக் கொண்டு என் தாயாரை 'அம்மா! என்னை ஏன் ராணுவத்தில் சேரும்படி கேட்கிறீர்கள்!- யுத்தத்தில் என் தகப்பனார் தன் உயிரை பலிகொடுக்க முயல்வது போதாதா? நானுமா அப்படிச் செய்ய வேண்டும் ' என்று கேட்டேன் அதற்கு அவர்கள், "உன் தந்தையின் உயிரைக் காப்பதற்காக உன்னை ராணுவத்தில் சேரும்படி வேண்டுகிறேன். நீ அவருடன் போய் அவருக்கு ஒரு கெடுதியும் வராதபடி காத்து என்னிடம் கொண்டு வந்து சேர்க்கவேண்டும்' என்றார்கள். தன் தாயார் இவ்வாறு வேண்டும்போது, அதை மறுக்க வல்ல பிள்ளை இவ்வுலகில் இருக்கிருனா? - நான் அப்படியே செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டேன் ஒப்புக் கொள்வாய் என்று எனக்குத் தெரியும்" என்று சொல்லி என் நெற்றியில் எனக்கு ஒரு முத்தம் கொடுத்தார்கள். அச்சமயத்தில் திடீரென்று நாங்களிருக்குமிடம் என் தகப்னார் வந்தார், நேராக நிமிர்ந்து நடந்துக்கொண்டு ! நான் வீட்டிலிருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டவராய், அடே பையா! உன் கல்லூரியை விட்டு ஏன் இங்கு வந்து சேர்ந்தாய் இப்பொழுது ?" என்று கேட்டார், அதற்கு பதிலாக உடனே என் தாயார், நான் வாயைத் திறக்குமுன், 'அவன் தன் பாடங்களை யெல்லாம் விட்டு, உங்களுடன் சண்டைக்குப்போக வந்திருக்கிறான்' என்று கூறிவிட்டார்கள்.அதன்பேரில் என் தந்தை, என் முதுகின்பேரில் பலமாய்த் தட்டிக் கொடுத்து, உரத்த சப்தத்துடன் தெருவிலிருக்கும் பலர்களுக்கும் கேட்கும்படியாக, “ சபாஷ் அதுதான் சரி, எப்பொழுதாவது, உன்மனம் இவ்வாறு மாறும் என்று எனக்கு நன்றாய்த் தெரியும் . நீயும் ராணுவத்தைச் சேர்ந்து சிறந்த போர் வீரனாவாய் என்று நான் நம்பியிருந்தது நிஜமாயிற்று - மீனாட்சி சுந்தரேஸ்வரர் கருணையினால்! ஆதிகாலத்தில் மதுரையில் வடக்கு அலங்கத்தைக் காப்பதில் தன் உயிரைக் கொடுத்த நமது முப்பாட்டனாருடைய ரத்தம் உன் உடம்பில் பாய்கிறது என்று சந்தோஷப்படுகிறேன். வீரபாண்டியன் வம்சத்திலுதித்த பையன் வீரனாயிருக்காமற் போகான் என்று கூறி,-- "வா என்னுடன் உடனே !' என்று என்னை கையும் பிடியுமாய், ராணுவத்திற்கு ஆட்கள் சேகரிக்கும் உத்யோக ஆபிஸ்க்கு அழைத்துக் கொண்டுபோய் விட்டார். நான் பேசாது அவருடன்