பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18

18 அது என் காணாமற்போன மோதிரமெனக் கண்டு, ஆச்சர்யமும் சந் தோஷமுமடைந்தேன். இதில் ஆச்சரியம் என்ன வென்றால் அந்த இடத்தில் அம்மோதிரம் ஒரு வாரமாக, பள்ளிக்கூடத்துப் பிள்ளை களும் மற்றவர்களும் நடமாடியபோதிலும் வேறொருவர் கண்ணுக்கும் புலப்படாமற்போய், என் கண்ணில் மாத்திரம் ஒரு வாரம் பொறுத் துப் புலப்பட்டது; இது தெய்வாதீனம் என்று நினைக்கிறேன். இவ் வாறு அது காணாமற்போய் அகப்பட்டது முதல் அதன்மீது எனக் கிருந்த பிரேமை அதிகரித்தது என்று நான் என் நண்பர்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. -

இரண்டாம் முறையும் காணுமற்போய் அகப்பட்டது நான் ராமேஸ்வர யாத்திரை செய்தபோது. நான் என் குடும்பத்தாருடன் 1904-ம் வருஷம் ராமேஸ்வர யாத்திரை செய்தேன். அச்சமயம், நவபாஷாணம் எனும் இடத்தில், சமுத்திர ஸ்நானம் செய்ய வேண்டுமென்று தெரிவித்தனர். சமுத்திரத்தில் மார் அளவுத் தண்ணீரில்.................. ஸ்நானம் செய்து விட்டு, கரையேறினேன். கரையேறியதும், என் சுண்டு விரலிலிருந்த அச்சிறு மோதிரம் இல்லா திருப்பதைக் கண்டேன். உடனே ஸ்தம்பித்து போயிற்றென்று சொன்னால் அது மிகையாகாது. அத்தனை பெரிய சமுத்திர ஜலத்தில் சுண்டைக்காய்க்கும் சிறிய ஒரு மோதிரத்தை எப்படித் தேடிக் கண்டு பிடிப்பது ? உடனே, முன்பு மைதானத்தில் காணாமற்போய் மறு படியும் தெய்வாதீனத்தால் அகப்பட்ட விசித்திரம் எனக்கு ஞாபகம் வர, பரம்பொருளின் கருணை இருந்தால் எனக்குக் கிடைக்கும், என்று ஒருவாறு என் மனதைத் தேற்றிக்கொண்டு கரையேறினேன். கரை யேறியதும், என தலை மயிரை உலர்த்த ஆரம்பித்தபோது, ஏதோ என் தலையில் சிக்கிக் கொண்டிருப்பதைக்கண்டு மெல்ல எடுத்துப் பார்க்க, என் மோதிரத்தைக் கண்டேன்! அது என் தலை ரோமத்தில் சிக்கிக் கொண்டிராவிட்டால் நான் அதை இழந்தவனே! இது தெய்வத்தின் கடாக்ஷம் என்று உறுதியாக நம்புகிறேன்; மற்றவர்கள் இதை நம்பா திருக்கலாம் ; நான் நம்புகிறேன்.


மூன்றாம்முறை காணாமற்போய்க் கிடைத்ததும் ஓர் விந்தையான சந்தர்ப்பமே. ஒருநாள் திருவல்லிக்கேணி பெரிய தெருவிலிருக்கும் ஒரு சினிமாக் கொட்டிகைக்குப்போய், இரவில் வேடிக்கை பார்த்து விட்டு என் மோட்டார்_வண்டியில் திரும்பி வந்துக்கொண்டிருக்கும் போது, என் கையை ஏனோ தடவ, என் சிறு விரல் மோதிரம் இல்லா திருப்பதைக் கண்டேன். உடனே மோட்டரை நிறுத்தி, கீழே இறங்கி, எல்லாம் தேடிப்பார்த்தேன். எனது நண்பர்களும் தேடினார்கள். மோதிரத்தைக் காணோம்! அம்முறை நேரிட்ட சந்தர்ப்பத்தின் விசேஷம் என்னவென்றால், இம்முறை முன் னிரண்டு முறையைப்