盛岛 ராகுல் சாங்கிருத்யாயன்
வர்க்கத்தைத் தானே குறைத்துக்கொண்டார். தீவிரத் தனிநபர் வாதியான அவர் மிகச் சின்னவயதிலேயே குடும்ப பந்தங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்தார்; பாட்டாளிவர்க்கத்தின் சர்வாதிகாரம்’ என்ற புதிய சித்தாந்தத்தின் பிரசாரகராகவும் குரலாகவும் மாறினர். ரஷ்யாவின் சோல்காஜ் (கூட்டுப் பண்ணை) களையும், சீனுவின் கம்யூன்”களையும் பார்த்ததும் அவர் ஆனந்த பரவசத்தோடு பேசுவதில் ஈடுபடுகிருர், மடங்கள், ஆசிரமங்கள், சாதுக்களின் அந்தரங்க ரகசிய அமைப்புகள், லாமாக்களின் ஏகபோக-தெய்வ ஆதிபத்தியம் ஆகியவற்றை அவர் கடுமையாக விமர்சித்தார். அவர் சம்பிரதாய ரீதியில் ஒரு மதவாதி அல்ல; எனினும் நம்பிக்கையின் ஆழமான உள்ளோட்டம் ஒன்று அவருள் இயங்கியது; இந்தியக் கலாசார மதிப்புகளை அவர் நேசித்தார். இந்தியா முழுமைக்கும் பொதுவான ஒருரக மொழி ஒருமைப் பாட்டை அவர் ஆதரித்தார்; ஆலுைம், 1948-ல், இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி அந்நாளையில் அதிகாரபூர்வமாகக் கடைப்பிடித்த மொழிக் கொள்கையிலிருந்து அவர் அந்நியமாகிவிட்டார். ஸஜ்ஜத் ஜாகீரும் டாக்டர் ராம்பிலாஸ் சர்மாவும் ஒரு பக்கத்திலும், ராகுலும் அவருடைய ஆதரவாளர்களும் மறுபுறத்திலுமாக எடுத்த நிலைகளின் தன்மைகள் தவறுகளை நாம் இங்கே சர்ச்சிக்க வில்லை. ராகுவின் அமைதியற்ற ஆத்மாவில் இயங்கிய இந்த நித்தியமான இழுபறிப் போராட்டம், இந்தி மொழியில் அவரு டைய எழுத்துக்களுக்கு ஒரு அதிவிசேஷத் தன்மையைச் சேர்த்தது என்பதே இங்கே குறிக்கப்படுகிறது.
அவர் தனது நாட்குறிப்புகளில் அதிகமான தன்முனைப்பும் விசாரனே இயல்பும் காட்டியுள்ளார்; தன் சுயவரலாற்றை எழுதுவ தற்குப் பெரிதும் அக்குறிப்புகளையே துணைகொண்டார். இந்த ரக எழுத்தின்மூலம் ஒரு இரட்டை நோக்கை நாம் கண்டுணரலாம்: ரசித்து மகிழும் ராகுல் வேறு பார்வையாளர் ராகுல் வேறு. முறையான படிப்பில் ஏற்பட்ட இடைவெளியை, ஒரு நபருக்கு எவ்வளவு சாத்தியமோ அவ்வளவுக்கு, மிக அதிகமான அளவிலும் வெகு பலவகைப்பட்ட தன்மையிலும், மனித விசாரிப்பின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் அறிவையும் தகவல்களையும் சேகரிப் பதன்மூலம் அவர் ஈடுகட்ட விரும்புகிருர். தனது அறிவுப் பெருக் கத்தைக் கொண்டாடுகிறபோதே, அவர் தன்னை மறந்து இமாலய மலைஓரத்தில் காணப்படும் மகத்தான இயற்கை அழகைக் கண்டு மகிழவும் அதை வர்ணிக்கவும் நின்றுவிடுகிருர்; அல்லது சுரண்டப் படுகிற கிராம மகளிரின் பரிதாப நிலைக்கு இரங்குவதில் தனது அடக்கிவைக்கப்பட்ட உணர்ச்சிகளைத் திறந்துகொட்டுகிருர் : அல்லது மாண்புமிகு பெரிய மனிதர்கள் என்று சொல்லப்படுகிற வர்களின் சிறுமைகள் குறித்து நயமான நகைக்சுவைக் குறிப்புகள்