பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரின்பம் தரும் பிராணாயாமம் 9] っ இறற்கரிய பெரும் பேறு) பிராணாயாமம் செய்தால் சுகமாக வாழலாம். சுகமாக நாட்களை கழிக்கலாம். வாழும் காலம் வரை, வலியறிமாமல் வலிமையோடு வாழலாம் என்றுதான் நாம் நினைக்கிறோம். அப்படியொரு வாழ்வை மட்டும் அளித்தால், பிராணாயாமத்திற்கு பெருமை இவ்வளவு கிடைத்திருக்குமா? உலகத்தில் உயர்ந்த வாழ்க்கையை மட்டுமல்ல. உன்னதமான வாழ்க்கையை உலகம் போற்றும் வாழ்க்கையை மட்டுமல்ல உலகையே ஆள்கின்ற, அருள்கின்ற, நடத்துகின்ற அரிய பெரிய சக்திகளையெல்லாம் அளிக்கின்ற ஆற்றல்களையல்லவா வழங்கி வருகிறது. - அந்த அரிய பெரிய சக்திக்குத்தான் சித்தி என்று பெயர் சூட்டியிருக்கின்றனர். சித்தம் என்றால் நமக்குத் தெரியும். சித்து என்றால் அறிவு என்று தெரியும். சித்தர் என்றால், சிந்தை தெளிந்தவர்கள் என்று தெரியும். சித்தி என்றால் என்ன அர்த்தம்? பேரறிவு, பலம், கைகூடுதல், முத்தி என்றெல்லாம் அர்த்தம். இப்படிப்பட்ட பெரும் அறிவையும், அளப்பரிய பலத்தையும், கேட்கவே நம்ப முடியாத வல்லமைகள் பல கைகூடி வருவதையும், கனிவோடு பெருக்கித் தருகின்ற காமதேனு வாகத்தான். பிராணாயாமம் இருக்கிறது. இந்த சித்திகளைத் தான் அட்டமாசித்தி என்பார்கள். இதை "பிழில் எண்வகை சித்திகள் என்றும் கூறுவார்கள். எண்வகை