பக்கம்:தேன் சிட்டு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தேன் சிட்டு


 "என்னடா, உங்கள் தத்துவம்? அதை நம்பி நம்பித் தான் இந்த நாடு கெட்டுக் குட்டிச் சுவராயிற்று கிடைத்த சுதந்திரத்தைக் காக்க இனிமேலாவது அதையெல்லாம் நெருப்பிலே போட்டுவிட்டு மேல் நாடுகளின் வழியைப் பின்பற்ற வேண்டும்" என்று மற்றொருவன் இடியிடித்தான். நான் சட்டென்று எழுந்து வீட்டை நோக்கி ஒடினேன். "ஏண்டா உனக்காக எத்தனை நேரம் காத்திருப்பது? உன்னிடத்திலே ஒரு விஷயத்தைப்பற்றி விவாதித்து முடிவு கட்டலாமென்று ஐந்து மணிக்கே வந்தேன்" என்று என் நண்பன் அறைக்குள்ளிருந்தவாறே வரவேற்றான். "விவாதமா? என்ன விஷயம்?" என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன். "கவிதைக்கு யாப்பு முதலிய வரம்புகளும் கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது என்பது என்னுடைய கட்சி. நீ அதற்கு மாறான கருத்தைத் தெரிவித்ததாகக் கேள்விப் பட்டேன். அதைப் பற்றித்தான் இப்பொழுது விவாதிக்க வேண்டும்” என்றான் நண்பன். எங்கு சென்றாலும் இவற்றிற்குத் தப்ப முடியாது என்று எனக்கு அப்பொழுதுதான் விளங்கிற்று.

எனக்கு இந்த மாறுபாடுகளைப்பற்றி அச்சமோ, வெறுப்போ கிடையாது. ஒரளவுக்கு அவற்றை நான் பாராட்டுகிறேன். அவ்ற்றினால்தான் உலகம் சுவை யுடையதாகத் தோன்றுகிறது. இந்த மாறுபாடுகளே வாழ்க்கைக்கு உப்பு. இவையில்லாவிடில் வாழ்க்கை சப்பையாகப் போய்விடும்.

ஆனால் உப்பு அளவுக்கு மீறினால் எல்லாம் கெட்டுப் போகும். சுவை கொடுக்கும் உப்பே உண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/35&oldid=1144956" இலிருந்து மீள்விக்கப்பட்டது