பக்கம்:தேன் சிட்டு.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முரண்பாடுகள் 35 முழுவதையும் பயனற்றதாகச் செய்துவிடும். இந்த உண்மையை எப்பொழுதும் உள்ளத்தில் கொள்ள வேண்டுமென்பதுதான் என்னுடைய ஆசை. உண்மையையும் பொதுநலத்தையும் உறுதி யான அடிநிலையாகக் கொண்ட எந்த மாறுபட்ட கருத்துக்களையும் பரிவோடு பார்க்கவேண்டும். தன் கொள்கைதான் நூற்றுக்கு நூறு சரியானது; வேருென்றிலும் உண்மையே இருக்க முடியாது என்ற குருட்டுப் பிடியே தொல்லைகளை விளைவிக்கின் றது. வடிவ கணிதத்திலே மறுக்க முடியாத பல உண்மைகள் வெளியிடப்படுகின்றன. அவற்றிற்குத் தேற்றங்கள் என்று பெயர். சில தேற்றங்கள் எவ்வளவு உண்மையோ அவ்வளவு அவற்றின் மறு தலைகளும் உண்மையாக இருக்கும். எடுத்துக் காட்டாக எளிமையான வடிவ கணித உண்மை ஒன்றை நோக்குவோம். ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் ஒன்றுக்கொன்று சமமாக இருந்தால் அதன் கோணங்களும் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும். இது தேற்றம். இதன் மறுதலேயாவது: ஒரு முக் கோணத்தின் மூன்று கோணங்களும் ஒன்றுக் கொன்று சமமாக இருந்தால் அதன் பக்கங்களும் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும். இதுவும் உண்மைதான். கருத்துக்களிலும் பல சமயங்களில் இந்த உண்மையைக் காணலாம். முரண்பட்ட கருத்துக் களிலேயும் உண்மை பதுங்கியிருப்பதை உணரலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/36&oldid=926629" இருந்து மீள்விக்கப்பட்டது