பக்கம்:தேன் சிட்டு.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36
தேன் சிட்டு


நேர்மையோடும், பொதுநல நோக்கோடும், பரந்த மனப்பான்மையோடும் கருத்துக்களையும் பிரச்சினை களையும் ஆராயும் திறமையை அனைவரும் பெற்று விட்டால் இந்த முரண்பாடுகளால் தீங்கே விளைய முடியாது. ஆனால் ஒவ்வொருவனுக்கும் தன்னைப் பற்றி நம்பிக்கையிருக்கிறது; மற்றவர்களைப்பற்றி ஐயமும் அவநம்பிக்கையும் அச்சமும் முன்னால் நின்று தெளிந்த பார்வையைத் தடுத்துக் கண்ணை மறைக் கின்றன. அதனால் ஒவ்வொருவனும் தன்னுடைய கருத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுவதையும் செயல் முறையில் நிறைவேற்றுவதையும் பின்னணியில் வைத்து மற்றவர்களின் நோக்கத்தைப்பற்றி உலகத்திலே அச்சத்தையும் பகைமையையும் வளர்ப் பதையே முதன்மையாகக் கருதத் தொடங்குகிறான். இவ்வாறு அனைவரும் முனைவதினாலே அதுவே நாளடைவில் ஒரு வெறியாகிவிடுகிறது; உண்மை ஆழத்தில் புதைந்து மறைந்துவிடுகிறது.

உலக யுத்தத்தின்போது சிறைப்பட்ட சில ஜெர்மானிய வீரர்களைப் பார்த்து நேசக் கட்சி வீரர்களில் பலர் ஆச்சரியப்பட்டார்களாம். எதனால் ஆச்சரியம் தெரியுமா? ஜெர்மானியரை அவர்கள் மனிதர்களாகப் பார்த்துத்தான் இப்படி ஆச்சரியம், அருகிலே பார்க்கும் வரையில் அவர்களை மனிதத் தன்மையற்ற அரக்கர்களாகவே அவர்கள் எண்ணி யிருந்தார்கள். அப்படித்தான் அவர்களுக்கு எடுத்துக் கூறி வந்திருக்கிறார்கள்.

இவ்வாறு மக்கள் தாமே கற்பனை செய்து கொண்ட பூதங்களினால் அல்லல்படுகிறார்கள்.