140 தி குன்றக்குடி அடிகளார்
படைக்கின்ற மனிதனும் மதிப்பில் உயர்கின்றான். மனிதகுல வரலாற்றை உயிர்ப்புடன் இயக்கி வளர்ப்பவன் ஆற்றல் படைத்த மனிதனே என்பதை மறந்துவிடுவதற்கில்லை. இன்று நம்முடைய உடம்பாற்றலை முழுமையாகப் பயன்படுத்தாத நிலையிலேயே நாம் வாழ்கின்றோம். இன்னும் சிலர் சுவைக்கும் கவர்ச்சிக்கும் இரையாகி உடம்பையே பழுது செய்துகொண்டுள்ளனர். நோய்க்கு இரையாகி நொந்து நொந்து அழுகின்றனர். உடலுக்கு நோய் இயற்கையன்று; செயற்கையேயாம். அதாவது நோய் மனிதனின் படைப் பேயாம். நெறி முறை பிறழ்ந்த வாழ்க்கையின் காரணமாகவே நோய் உடம்பில் இடம் பிடிக்கிறது. உடல் உழைப்புக்குத் தேவையான உணவும் ஓய்வும் கிடைத்தால், உடல் நன்றாக இயங்கும். துய்மைக்கேடு இல்லாத காற்றும் தண்ணிரும் மானுட வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. நல்லுடல், வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. இந்த உடம்பைக் கருவி யாகக் கொண்டே உலகத்தை இயக்கவேண்டியிருக்கிறது; வையகத்தில் வாழவேண்டியிருக்கிறது; திருவருளைப் பெற வேண்டி இருக்கிறது. அனைத்துக்கும் இந்த உடற்கருவியின் ஒத்துழைப்புத் தேவை. வளமான வாழ்க்கை காண, வளமான உடல்நலம் தேவை.
உடல் நலத்திற்குத் துணை செய்வது அகநிலை உணர்வுமாகும். மனம், இன்றைக்கு எல்லா மட்டங்களிலும் முதல் நிலைப்படுத்திப் பேசப் பெறுகிறது. வள்ளுவமும் "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்” என்கிறது "மனத்துாய்மையாய் இருப்பதனால் பத்து மனிதர்களின் பலத்தை அடையக்கூடும்” என்று டென்னிசன் கூறுகிறார். மனம் மாசுறுவது எங்ங்னம்: மனத்துக்கு இயல்பாக மாசு