பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 21

வழக்கப் பண்பாலும், அந்தப் பெண் அனைவருடைய நன் மதிப்பையும் பெற்று வளர்ந்தாள்.

மீராவின் நேர் கொண்ட பார்வையினையும், நிமிர்ந்த தன்மான நடத்தையினையும், எதற்கும், எவருக்கும் அஞ்சாத நக்கீரன் பண்பதனையும் கண்ட அவளுடன் படிக்கும் சக மாணவர்கள், அவளை ஒரு ராஜகுமாரி என்றே அழைத்து வந்தார்கள்!

அவரது தோற்றமும், தோல் பளபளப்பு நிறமும், அகண்ட நெற்றியும் அறிவார்ந்த சிந்தனைப் போக்குகளும், சக மாணவ, மாணவியர் மட்டுமல்லர், எவர் பார்த்தாலும் ராஜகுமாரி என்றே அழைப்பார்களே தவிர, மீரா என்பதையே மறந்து விடுவார்கள். ஏனென்றால் ஓர் அரச குமாரிக்கு அல்லது இளவரசிக்குரிய தோற்றம் என்னவோ, அதற்கான காரணங்கள் என்னென்னவோ, அவை அத்தனையும் மீராவிடம் புல் நுனியின் பனித் துளியில் தோன்றும் காட்சி போல காண்பார்கள்.

ஆனால், அரச குமாரிகளில் யாரும் தனது பணிகளைத் தான்ே செய்து கொள்ள மாட்டார்கள் இல்லையா? இதுதான்ே இளவரசிகள் இயல்பு கேளிக்கை, பகட்டு, படாடோபம், ஆடல் - பாடல்கள் ஆகியவைதான்ே அவர்களது பொழுது போக்கு? அதனாலே, பெரும் பொழுதை மேற் சொன்னவற்றிலேயே அவர்கள் காலம் கழிப்பார்கள்!

ஆனால், இந்த அரச குமாரியோ ஒரு விநாடியைக் கூட வீணாக்கமாட்டார் எப்போதும் - ஏதோ ஒரு சிந்தனை:சுறு சுறுப்பு; பரபரப்புச் செயல்களிலேயே மிதந்து கொண்டிருப்பார்!

பத்து அல்லது பன்னிரன்டு வயது இருக்கும் மீராவுக்கு! மீரா படித்து வந்த பள்ளியில் மாணவர்களுக்கும் - மாணவிகளுக்கும் இடையே ஓர் ஒழுங்கீனத் தகராறு உருவாகி, வாய் வாதங்களால் முற்றிப் பெரியதாகி, பெண்கள் ஓர் அறைக்குள் ஓடிக் கதவைத் தாளிட்டுக் கொண்டு பயந்த சுபாவங்களோடு ஒளிந்து கொண்டிருந்தார்கள்.